மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 அக் 2018

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் லாலிபாப்!

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் லாலிபாப்!

தினமும் வேலை வேலை என பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பதால், குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் சுவையான சாப்பாடு செஞ்சுக் கொடுக்க முடியலன்னு புலம்புகிற பெண்களை பார்க்காமல் இருக்கவே முடியாது. குறிப்பாக, வீட்ல உள்ள குழந்தைகள் கேட்குற சிக்கன் லாலிபாப்புகளைக் கூட ஸ்விகி, உபேர் ஈட்ஸ் போன்ற உணவு ஆப்களில் பதிவு செஞ்சு வாங்கி கொடுத்துக்கிட்டு இருக்குற நிறைய பேரை பார்க்கமுடியுது. சிக்கன் லாலிலாப்பை வீட்டிலேயே செய்றது எப்படின்னு இந்த வார வீக் எண்ட் ஸ்பெஷலாக பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

சிக்கன் லாலிபாப் துண்டுகள் - 8

முட்டை - 1

இஞ்சி பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்

மிளகுத் தூள் - 1 டீ ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ½ டீ ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்

தயிர் - 50 மில்லி

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

சிவப்பு கலர் - 1 சிட்டிகை (விருப்பமிருந்தால்)

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

உப்பு – தேவைக்கேற்ப

அலங்கரிக்க

வெங்காயத் தாள் அல்லது கொத்தமல்லித்தழை

செய்முறை

முதலில் சிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம்செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, தயிர், சோள மாவு, உப்பு, சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சிவப்பு கலர் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் லாலிபாப் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டி எடுக்கவும். பின்னர், மசாலா கலவை சிக்கனில் முழுக்கப் பரவி இருக்குமாறு செய்யவும். இந்த கலவையை சுமார் அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

அதன்பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊறவைத்துள்ள சிக்கன் லாலிபாப் துண்டுகளை ஒவ்வொன்றாக அதில் பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்த சிக்கன் லாலிபாப் துண்டுகளை டிஸ்யூ பேப்பர்களில் அல்லது சாதாரண பேப்பர் தாள்களில் எடுத்து வைத்து, எண்ணெய் உறிஞ்சியதும் டூத்பிக்கை சொருகி சூடாகப் பரிமாறவும். வீட்டிலேயே சூடான லாலிபாப் ரெடி!

குறிப்பு

டோமாட்டோ சாஸ் அல்லது சில்லி சாஸ்ஸுடன் பரிமாறவும்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 13 அக் 2018