மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

என்டிஆர் படத்தில் 'ஜெயலலிதா ரெஃபரன்ஸ்’!

என்டிஆர் படத்தில் 'ஜெயலலிதா ரெஃபரன்ஸ்’!

என்டிஆர் பயோபிக் படத்திற்கு தற்போது புதிய போட்டி உருவாகியுள்ளது.

மறைந்த தெலுங்கு நடிகரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான என்டி ராமா ராவின் வாழ்க்கைக் கதையைத் தழுவி 'என்டிஆர் கதாநாயகுடு' எனும் படம் உருவாகிவருகிறது. இதில் என்டிஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கவே அவருடன் வித்யா பாலன், ராணா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோரும் இதில் நடிக்கின்றனர். இயக்குநர் க்ரிஷ் இதை இயக்கும் நிலையில் எம்எம் கீரவாணி இதற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், சர்ச்சைக்குப் பெயர்போன இயக்குநரான ராம் கோபால் வர்மாவும் என்டிஆரின் பயோபிக் படமொன்றை இயக்கவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். இப்படத்திற்கு 'லக்‌ஷ்மியின் என்டிஆர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொடர் ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ள இயக்குநர் ராம் கோபால் வர்மா, தான் இயக்கும் ‘லக்‌ஷ்மியின் என்டிஆர்’ திரைப்படம் என்டிஆரின் வாழ்க்கையில் லக்‌ஷ்மி பார்வதி நுழைந்தபின்னர் ஏற்பட்ட விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாக உருவாகவுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், ஜனவரி இறுதியில் இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், அக்டோபர் 19ஆம் தேதி இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்த்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படங்களை எடுக்க பல விதமான போட்டிகள் தற்போது நிலவிவருகின்றன. ஏற்கெனவே பலர் ஆயத்தமாகியுள்ள நிலையில் இன்னும் எத்தனை பேர் இந்த பயோபிக்கை உருவாக்குகிறேன் என கிளம்புவார்களோ தெரியாது. கிட்டத்தட்ட இதேமாதிரியான சூழல்தான் ராம் கோபால் வர்மாவின் இந்த பயோபிக் முயற்சியால் தெலுங்கு சினிமாவிலும் தற்போது உருவாகியுள்ளது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon