மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 31 மா 2020

ரயில் நிலையத்திற்கு அம்பேத்கர் பெயர்: கோரிக்கை!

ரயில் நிலையத்திற்கு அம்பேத்கர் பெயர்: கோரிக்கை!

மும்பை மத்திய ரயில் நிலையத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயரை சூட்டக் கோரிக்கை விடுக்கப் போவதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்துள்ளார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரான ராம்தாஸ் அதவாலே நேற்று (அக்டோபர் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாக்டர் அம்பேத்கர் மும்பையில் அதிக நாட்களை கழித்துள்ளார். மேலும், பல்வேறு சமூக போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். எனவே, மும்பை மத்திய ரயில்நிலையத்திற்கு அவரின் பெயரை சூட்டுவதே பொருத்தமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் விக்டோரியா ரயில் முனையம் ஆகியவற்றிற்கு சத்ரபதி சிவாஜியின் பெயர் சூட்டப்பட்டதற்கு தலித்கள் வரவேற்பு தெரிவித்தனர். மும்பை ரயில் நிலையத்திற்கு அம்பேத்கரின் பெயர்ச் சூட்டப் படுமேயானால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக விரைவில் மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயால் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் மும்பை புறநகரில் உள்ள மேற்கு ரயில்வேயின் "எல்பிஸ்டோன் ரோட்" ரயில் "பிரபாதேவி" என்று பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon