மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

பிரதமர் பாட்டு: மாணவிகள் நடனம்!

பிரதமர் பாட்டு: மாணவிகள் நடனம்!

பிரதமர் நரேந்திர மோடி எழுதிய ஒரு குஜராத்திப் பாடலுக்கு, பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி மாணவிகள் கர்பா நடனமாடிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது.

குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தி மொழியில் சில கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார். தற்போது நாடெங்கும் நவராத்தி விழா கொண்டாடப்பட்டுவருகிறது. குஜராத் மாநிலத்தில், இவ்விழாக்காலத்தில் பெண்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து தாண்டியா, கர்பா நடனமாடுவார்கள்.

இந்நிலையில், குஜராத்தியில் பிரதமர் மோடி எழுதிய பாடல் ஒன்றுக்கு, பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி மாணவிகள் சிலர் கர்பா நடனமாடியுள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அகமதாபாத் நகரிலுள்ள அந்த் கன்யா பிரகாஷ் குருஹ் பள்ளியைச் சேர்ந்த பார்வைத்திறன் அற்ற மாணவிகள், பிரபலமான கர்பா நடனத்தின் மூலம் தனது பாடலுக்கு உயிரூட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இது தன்னுடைய மனதைத் தொட்டுவிட்டதாகவும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (அக்டோபர் 13) தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், அந்த நடனக் காட்சி அடங்கிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon