மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

விமானத்தில் வைஃபை சேவை!

விமானத்தில் வைஃபை சேவை!

வைஃபை வசதியுடனான விமானத்தை ஸ்பைஸ்ஜெட் தனது நிறுவனத்தில் இணைத்துள்ளது.

விமானத்துக்குள்ளேயே வைஃபை வசதி இருக்கும்படியான விமானம் ஒன்றை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது படையில் இணைத்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக வைஃபை வசதி கொண்ட விமானத்தை வாங்குவது இதுவே முதன்முறையாகும். இந்தியாவில் விமானங்களில் வைஃபை சேவைகளைப் பயன்படுத்துவதற்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது. இதைத் திருத்தி வைஃபை பயன்படுத்துவதற்கான ஒப்புதலை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு அனைத்து உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் தங்களது விமானங்களில் வைஃபை சேவைகளை வழங்கலாம்.

கடந்த ஆண்டில் மட்டும் 22 பில்லியன் டாலர் மதிப்பிலான 205 விமானங்களை (வைஃபை வசதியுடன்) ஸ்பைஸ்ஜெட் ஆர்டர் செய்துள்ளது. இந்த விமானங்கள் அனைத்திலும் வைஃபை சேவை வழங்குவதற்கான வசதிகள் பொருத்தப்பட்டிருக்கும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முதல் வைஃபை விமானத்தைக் கொண்டு அடுத்த மாதம் முதல் ஹாங்காங்குக்கு விமானப் போக்குவரத்துச் சேவையை ஸ்பைஸ்ஜெட் தொடங்கவுள்ளது. இந்த விமானங்கள் எரிபொருள் சிக்கனத்துடன் இயங்கும் என்பதும், பராமரிப்புச் செலவுகள் குறையும் என்பதும் கூடுதல் சிறப்பு.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon