மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

டெங்கு: கருத்தரங்கம் தொடக்கம்!

டெங்கு: கருத்தரங்கம் தொடக்கம்!

சென்னை எழும்பூரில் டெங்கு காய்ச்சல் மேலாண்மை தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம் நேற்று (அக்டோபர் 12)தொடங்கியது.

கடந்த ஆண்டில் தமிழகத்தில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது டெங்கு காய்ச்சல். நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்தே டெங்குவின் தாக்கத்தைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் தமிழகச் சுகாதாரத் துறைஅமைச்சர் விஜயபாஸ்கர்.

சென்னை எழும்பூரில் உள்ள நல்வாழ்வு மற்றும் குடும்ப நலப் பயிற்சி மையம் சார்பில், நேற்று டெங்கு காய்ச்சல் மேலாண்மைக்கருத்தரங்கம் நடைபெற்றது. இதனைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். இந்த கருத்தரங்கில் மலேசிய பல்கலைக்கழக டெங்கு வல்லுநர் டாக்டர் லூசி லும் தாய் சீ, ருக்மணி மரு நேமிநாதன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் டாக்டர் லூசி லும் தாய் சீ எழுதிய டெங்கு குறித்த நூலை, இந்த கருத்தரங்கில் வெளியிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் அனைத்து மாவட்டப் பொது சுகாதாரத் துணை இயக்குநர்கள், குழந்தைகள் நலமருத்துவர்கள், பூச்சியியல் வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுத்தல், சுற்றுச்சூழல் தூய்மையைப் பராமரித்தல் உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர்அறிவுரைகள் வழங்கினார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது