மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

கட்டுக்கடங்காத வங்கி மோசடிகள்!

கட்டுக்கடங்காத வங்கி மோசடிகள்!

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ.5,555.48 கோடி மதிப்பிலான மோசடிப் புகார்கள் வந்துள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ஏற்பட்ட வங்கி மோசடிகள் குறித்த விவரங்களை வழங்குமாறு ஆர்.டி.ஐ செயற்பாட்டாளரான சந்திரசேகர் கவுட், தகவல் அறியும் உரிமை மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதற்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) அளித்துள்ள பதிலில், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ.5,555.48 கோடி மதிப்பிலான 1,329 மோசடிகள் குறித்த புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.723.06 கோடி மதிப்பிலான 669 மோசடிப் புகார்கள் வந்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் ரூ.4,832.4 கோடி அடங்கிய 660 புகார்கள் வந்துள்ளதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. முதல் காலாண்டைக் காட்டிலும் இரண்டாம் காலாண்டில் புகார்களின் எண்ணிக்கையில் 9 புகார் மட்டுமே குறைந்துள்ளது. ஆனால், மோசடிக்குள்ளான தொகையின் மதிப்பு 568.33 விழுக்காடு அதிகரித்துள்ளது. வங்கி மோசடிகளால் ஏற்பட்ட ஒட்டுமொத்த நிதியிழப்பு குறித்த விவரங்களையும் இந்த மனுவில் சந்திரசேகர் கவுட் கேட்டுள்ளார். எனினும், ஒட்டுமொத்த இழப்புத் தொகையை அளவிட முடியாது என்று எஸ்பிஐ பதிலளித்துள்ளது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon