மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

அம்மா ஆட்சின்னா சும்மாவா: அப்டேட் குமாரு

அம்மா ஆட்சின்னா சும்மாவா: அப்டேட் குமாரு

ஸ்ட்ராங்கா ஒரு டீயை சொல்லிட்டு பெஞ்சுல உட்கார்ந்தேன். பால் சூடாகலப்பான்னு சொன்ன மாஸ்டர் அவ்ளோ சூடா இருந்தாரு. என்ன ஆச்சு மாஸ்டர்ன்னு விசாரிச்சேன். “அம்மா வழியில் ஆட்சி நடத்துறோம்னு சொன்னப்ப கூட நான் நம்பல, ஆனா இன்னைக்கு நம்பிட்டேன்”னு சொன்னாரு. பரவாயில்லையே சாதிச்சுட்டாரே.. அதுக்கு ஏன் இவ்ளோ விறைப்பா இருக்கீங்கன்னு கேட்டா, சிபிஐ மேட்டரை சொன்னாரு. ஓ அதுக்கு தான் அந்த அம்மாவை உதாரணமா சொன்னாரா. இந்த விஷயத்தை நம்ம பசங்கட்ட வந்து சொன்னேன். உடனே அவங்க திஹாரா, புழலான்னு பட்டிமன்றம் நடத்திகிட்டு இருக்காங்க, அன்னைக்கு மாதிரியே பன்னீர் சிரிச்சாப்ள கையெடுத்து கும்புடுற போட்டோ தான் என் ஞாபகத்துக்கு வருது. இதை அவங்கட்ட சொன்னா உடனே மீம் போட ஆரம்பிச்சிருவாங்க.. நமக்கு எதுக்கு வம்பு நீங்க அப்டேட்டை பாருங்க.

@Kozhiyaar

'அம்மா, கடையில் ஏதாவது வேணுமா?' என்று மகன் கேட்டால் அவருக்கு அந்த கடையில் இருந்து ஏதோ வேண்டும் என்று பொருள்!!!

@Thaadikkaran

ஹோட்டல்ல இலையில் ஊத்துறே சட்னி ஆறா ஓடுச்சுன்னா சட்னி தீர்ந்து ரொம்ப நேரம் ஆச்சுன்னு அர்த்தம்..!

@anand17m

உனக்காவது இது கிடைத்தது ,

நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு வசதியில்லை என்று சொல்லும் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரிக்கிறார்கள் இந்த காலத்து குழந்தைகள்...

@ajmalnks

சிவாஜி மடியில் தவழ்ந்து எம்ஜிஆர் தோளில் விளையாடி கருணாநிதியிடம் பயின்று அரசியல்வாதி ஆகியுள்ளேன்

- கமலஹாசன்

அரசியல்வாதியா இது எப்போ?

@smhrkalifa

பாட்டிக்கு மணியார்டர் வந்தால் கைநாட்டு வைக்க அவங்க கட்டைவிரலை தூக்கிவைப்பேன்,

இப்போ என் மகள் போன் லாக் எடுக்க என் கட்டைவிரலை தூக்கி வைக்கிறா..

@Kadharb32402180

இப்ப எல்லாம் ஏன் விக்கரம்னும் விசுவும் படம் எடுப்பதில்ல

ஏன்னா இப்ப கூட்டு குடும்பம் அப்படின்னு ஒண்ணு இல்லை

@ajmalnks

விஜய் ஓட்டு கேட்டு வீதிக்கு வந்தா, இங்கே பலருக்கும் பீதி கிளம்பும் – நாஞ்சில் சம்பத்

அண்ணனுக்கு ஒரு ஹீரோ சைக்கிள் பார்சல்-எஸ்.ஏ.சி

@nandhu_twitts

மக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வாங்கி கொண்டு போய்..

ஒரே இடத்தில் ஒன்றாக கொட்டி வைப்பதெல்லாம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய பயணம்தான்..!!

@Thaadikkaran

இனி ஐ லவ் யூ ல், ஐ மிஸ் யூ ன்னு சொன்னாக்கூட 'மீ டூ' ன்னு சொல்ல மாட்டாய்ங்க.

@Kozhiyaar

'நீ எப்படி இருந்தாலும் நான் உன்னுடன் தான் இருப்பேன்' என்பதில் ஆரம்பித்து, 'நீ இப்படி இருந்தால் தான் என்னுடன் இருக்கலாம்' என்பதாக முடிகிறது காதல்!!!

@ajmalnks

முதல்வர் எடப்பாடி மீதான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு-செய்தி

பிற்காலத்தில் திகார்ல ஒரு ப்ளாக்கே தேவைப்படும் போலயே...

@HAJAMYDEENNKS

பெட்ரோல், டீசலுக்கு 'லோன்'. அறிமுகமானது புதிய கடன் திட்டம் - செய்தி #

டிஜிட்டல் இந்தியான்னு சொல்லிட்டு லோன் இந்தியாவாக மாத்திட்டாங்க !

@kumarfaculty

சமையலறையில் தேங்காய் உடைக்கப்படும் சத்தத்தை குழந்தைகள் எந்த அறையில் இருந்தாலும் கேட்க முடியும்.டம்ளரோடு வந்து விடுவார்கள்...!!!

@iamkarthikeyank

தாய்மொழி கண்கள் போன்றது; பிறமொழிகள் கண்ணாடி போன்றது: வெங்கையா நாயுடு

கண்ணு நல்லாத்தானே இருக்கு, எதுக்கு கண்ணாடி

@amuduarattai

எஸ்.பி.ஐ வங்கியில் கடந்த 6 மாதத்தில் 5,555 கோடி மோசடி.

நல்ல பேன்சி நம்பரா இருக்கே..!!

@nandhu_twitts

பஸ்ல ஒருத்தர் தான் இறங்க வேண்டிய இடம் வந்தா சொல்லுங்கனு சொல்லிட்டு அவர் தூங்க ஆரம்பிச்சிடுவார்..

நாம தூங்காம அவரோட ஸ்டாப் வர வரைக்கும் முழிச்சிக்கிட்டு இருக்கனும்..!!

@BlackLightOfl

இந்து விரோத கட்சிகளை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்-எச்.ராஜா#

இருக்கின்ற கட்சியிலே இருந்துகொண்டு தன் கட்சியைவே மக்கள் புறக்கணிக்க வேண்டுமென்று கூறுகின்ற தைரியமும் தன்னம்பிக்கையும் எங்கள் அண்ணன் எச் ராஜா வுக்கு மட்டுமே உண்டு என தெரிவித்துக்கொள்கின்றோம்.!

@rahimgazali

முன்பெல்லாம் ஜனாதிபதியின் பேரும், தமிழக ஆளுநரின் பேரும் என்னவென்று கேட்டால் சில நொடிகள் யோசித்துதான் சொல்லும்படி இருந்தது. ஆனால் இப்ப ஜனாதிபதி பேர் மட்டும்தான் சட்டென்று நினைவுக்கு வரமாட்டேங்குது. அடிக்கடி செய்திகளில் அடிபட்டதாலோ என்னவோ ஆளுநர் பேர் பட்டென்று நினைவுக்கு வந்துடுது.

@HAJAMYDEENNKS

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு #

பொதுவா பதவி போன பிறகுதான் வழக்கு ,விசாரணை எல்லாம் வரும்..இப்ப பதவியில இருக்கும்போதே வருது..நல்ல வளர்ச்சிதான் !

@amuduarattai

ரஃபேல் விமானம் வாங்கும் முடிவு எடுத்தது எப்படி..?. - உச்ச நீதிமன்றம்.

கமிஷன் அடிப்படையில் தான்..!!

-லாக் ஆஃப்

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon