மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

அமெரிக்காவை இந்தியா புரிந்துகொள்ளும்!

அமெரிக்காவை இந்தியா புரிந்துகொள்ளும்!

தனது வரி விதிப்புகள் குறித்து இந்தியா விரைவில் புரிந்துகொள்ளும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து எஸ்-500 பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்கு 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்குத் தண்டனை விதிக்கும் விதமாக ’காட்சா’ வரிகளை விதிக்க டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். ’காட்சா’ வரி என்பது அமெரிக்காவின் எதிரிகளை வரி விதிப்புகள் மூலமாகத் தண்டிப்பதற்கான சட்டமாகும். அக்டோபர் 10ஆம் தேதியன்று வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது இந்தியா - ரஷ்யா இடையேயான ஒப்பந்தம் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், “அதுகுறித்து இந்தியா விரைவில் புரிந்துகொள்ளும்” என்று கூறினார்.

’எப்பொழுது’ என்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “நீங்களே பார்ப்பீர்கள்; நீங்கள் நினைப்பதை விடவும் விரைவாகப் பார்ப்பீர்கள்” என்று கூறினார். காட்சா வரி விதிப்பு ரஷ்ய உபகரணங்களிலிருந்து மற்ற நாடுகளை அப்புறப்படுத்துவதற்காக விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்புக் குழு பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், காட்சா வரி ரஷ்யாவைக் குறிவைத்து விதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவின் நட்பு நாடுகளின் ராணுவத் திறனைச் சேதப்படுத்துவதற்காக விதிக்கப்படவில்லை என்றும் டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதரக பேச்சாளரும் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon