மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

பத்திரிகை ஊழியர்களை கைதுசெய்ய மாட்டோம்: காவல்துறை!

பத்திரிகை ஊழியர்களை கைதுசெய்ய  மாட்டோம்: காவல்துறை!

பத்திரிகை ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பணி செய்யவிடாமல் தடுத்த குற்ற வழக்கில் அக்டோபர் 9 காலை கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால், எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவால் நேற்று மாலையே விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில், நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவில் பணி செய்யும் அதிகாரிகள் முதல் நிர்வாகப் பிரிவின் கீழ் நிலை ஊழியர்கள் வரை சுமார் 35 பேரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (அக்டோபர் 11) மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு இன்று (அக்டோபர் 12) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக ஐயப்பராஜ் ஆஜரானார். நக்கீரன் ஊழியர்கள் தரப்பில் பி.டி.பெருமாள், இளங்கோவன், சிவக்குமார் ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்போது, பத்திரிகைகள் மீது அவதூறு வழக்கு மட்டுமே தொடரமுடியும் எனக்கூறிய நீதிபதி தண்டபாணி, “பிரிவு 124 இன் கீழ் வழக்குப் பதிவு செய்தது எப்படி? எங்காவது செல்லும்போது அவரை தடுத்தாலோ, பணி செய்யவிடாமல் தடுத்தாலோ தான் 124 பொருந்தும். காவல்துறைக்கு இது தெரியாதா ”என கேள்வி எழுப்பினார்.

நக்கீரன் ஊழியர்களைக் கைது செய்ய மாட்டோம் ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்த நீதிபதி தண்டபாணி 35 பேரின் முன் ஜாமின் மனுவில் பதிலளிக்க உத்தரவிட்டு அக்டோபர் 25ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon