மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

தேவசம் போர்டைக் கலைக்கக் கோரி வழக்கு!

தேவசம் போர்டைக் கலைக்கக் கோரி வழக்கு!

சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் தேவசம் போர்டைக் கலைக்க வேண்டும் என்று கூறித் தொடரப்பட்ட வழக்கில், தேவசம் போர்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் சமமான அளவில் இருந்து வருகின்றன. இந்தத் தீர்ப்பை எதிர்த்துச் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என கேரள அரசும் தேவசம் போர்டும் தெரிவித்தன.

இந்த தீர்ப்புக்கு எதிராக, கேரளா மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டைக் கலைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணிய சுவாமி, டிஜி மோகன்தாஸ் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 12) மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர் நீதிபதிகள். இந்த மனு தொடர்பாக, தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்; இந்த வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon