மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

இணையதள சேவை பாதிப்பு?

இணையதள சேவை பாதிப்பு?

இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் முக்கிய சர்வரில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுவதும் இணையதள சேவை வெகுவாகப் பாதிக்கப்படும் என ரஷ்யா டுடே செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இணையதளத்தை நிர்வகிக்கும் அமைப்புகளில் ஒன்றான ஐசிஏஎன்என், சர்வர்களில் இருக்கும் க்ரிப்டோகிராஃபிக் கீ என்பதனை மாற்றும் என்று சொல்லப்படுகிறது. இந்த கீ தான், இணையதளத்தைப்பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் கருவியாகச் செயல்படுகிறது.

தொடர்ச்சியாக உலக அளவில் சைபர் க்ரைம்கள் அதிகமாக நடந்து வரும் நிலையில் ஐசிஏஎன்என் இந்த நடவடிக்கையை எடுக்க முடிவு எடுத்துள்ளது. இந்த பராமரிப்பு குறித்து தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான சிஆர்ஏ தகவல் வெளியிட்டுள்ளது. “இந்த பராமரிப்புப் பணி உலக அளவில் இணையத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். இதன் மூலம், உலக அளவில் பல பயனர்களின் இணையதள சேவை முடங்க வாய்ப்புள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள், பயனர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று தன் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon