மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

பூக்கடைகளுக்கு சீல்: நீதிபதிகள் கேள்வி!

பூக்கடைகளுக்கு சீல்: நீதிபதிகள் கேள்வி!

திருட்டு விசிடிக்கள் விற்கப்படும் சென்னை பர்மா பஜாரில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதா என்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை பாரிமுனை அருகேயுள்ள பத்ரியன் தெருவில் வியாபாரம் மேற்கொண்டு வந்த பூ வியாபாரிகளுக்கு, கோயம்பேடு சந்தையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும், பத்ரியன் தெருவில் வியாபாரிகள் பூக்கடைகளை நடத்திவந்தனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. பத்ரியன் தெருவில் தங்களை பூ வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்றும், அதிகாரிகள் எந்த வித இடையூறும் செய்யக் கூடாது என்றும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை பத்ரியன் தெருவில் உள்ள அனைத்து பூ விற்பனைக் கடைகளுக்கும் சீல் வைக்குமாறு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்குச் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், நேற்று (அக்டோபர் 11) 129 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சில்லறை பூ வியாபாரிகளையும் கடை அமைக்கத் தடுப்பதாகக் கூறி வழக்கறிஞர் பாலு, நீதிபதிகளிடம் முறையிட்டார்.

விசாரணையின்போது, பூக்கடைகளுடன் சேர்த்து பூக்கடை காவல் நிலையத்துக்கும் சீல் வைக்கப்பட்டதா என்று நகைச்சுவையாகக் கேட்டனர் நீதிபதிகள். சில்லரை வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்காமல், எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர். அத்துடன், திருட்டு விசிடிக்கள் விற்பனை செய்யும் பர்மா பஜாரில் உள்ள கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டதா என்று கேட்டனர்.

இந்த விவகாரத்தில் புதிய வழக்குகளை அனுமதித்தால் அதற்கு எதிர்த் தரப்பினர் பதிலளிக்கக் கால அவகாசம் வழங்க வண்டும் என்பதால், இன்று பட்டியலில் உள்ள வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவு அனைவருக்கும் பொருந்தும் என்று கூறி, இந்த மேல் முறையீட்டு வழக்கைப் பிற்பகல் விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon