மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

பெண்கல்வி சமூகத்தை முன்னேற்றும்: மிஷெல் ஒபாமா

பெண்கல்வி சமூகத்தை முன்னேற்றும்: மிஷெல் ஒபாமா

உலக முழுவதும் சர்வதேசச் சிறுமிகள் தினம் நேற்று (அக்டோபர் 11) கொண்டாடப்பட்டது.

சிகாகோவில் உள்ள ஒபாமா அறக்கட்டளை சார்பில், இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா ஒரு திட்டமொன்றை அறிமுகப்படுத்தினார். உலகம் முழுவதும் உள்ள வளரும் இளம் பெண்கள் அனைவரையும் மேம்படுத்தும் நோக்கில் இதனை அறிவித்தார்.

அப்போது, படித்த பெண்ணால் தனது குடும்பத்தையும், சமூகத்தையும், நாட்டையும் உயர்த்த முடியும் என்று தெரிவித்தார். அதனால்தான், உலகெங்கிலும் இளம் பருவக் குழந்தைகளின் கல்விக்கான ஒத்துழைப்பை ஏற்படுத்த 'உலகளாவிய பெண்கள் கூட்டமைப்பு' என்பதனை ஒபாமா அறக்கட்டளை துவக்கியுள்ளதாகப் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

“உகாண்டா, இந்தியா, கானா மற்றும் கவுதமாலாவில் உள்ள பெண்கள் கல்விக்குப் பயன் பெறும் வகையில் ஐந்து திட்டங்கள் இப்போது நன்கொடைகளுக்குத் திறந்துவைக்கப்பட உள்ளது" என்று இந்த நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

இது குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். "உலகளாவிய பெண்கள் கூட்டமைப்பு தகுதியானவர்களுக்கு வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். மிஷெல் ஆரம்பித்துள்ள இந்த அறக்கட்டளையானது மிகப் பெரிய மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon