மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

சுற்றுச்சுவரில் மோதிய விமானம்!

சுற்றுச்சுவரில் மோதிய விமானம்!

திருச்சியிலிருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி சென்றது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று(அக்டோபர் 12) அதிகாலை 1.20 மணியளவில் 130 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது ஏர் இந்தியா விமானம். ஓடுதளத்திலிருந்து விமானம் மேலே எழும்போது, இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரம் மீது உரசியது. தொடர்ந்து விமானத்தின் டயர் அங்கிருந்த சுற்றுச் சுவர் மீது மோதியது; அதன்பின் விமானம் வானில் பறந்தது. இதனால், பயணிகள் அச்சமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, விமானியின் சாமர்த்தியத்தால் அந்த விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த 130 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து, இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் விசாரித்து வருகிறது. விபத்து ஏற்பட்ட இடத்தில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், விமான நிலைய இயக்குநர் குணசேகரன் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon