மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

கருணாகரன் விவகாரத்தில் புதிய திருப்பம்!

கருணாகரன் விவகாரத்தில் புதிய திருப்பம்!

நடிகர் கருணாகரனின் சமீபத்திய விவகாரத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் இரு தரப்பு ரசிகர்கள் விவாதம் செய்துகொள்வது வழக்கமான ஒன்று. காரசாரமாக முட்டிமோதிக்கொள்ளும் இருதரப்பும் வேறு ஏதாவது புதிய பிரச்சினை ட்ரெண்டிற்கு வந்தால் இதைவிட்டுவிட்டு உடனேயே அந்த விஷயத்துக்குத் தாவிவிடுவார்கள்.

இப்படியாக ரசிகர்களின் வாக்குவாதங்களாக மட்டுமே தொடரும் சினிமாவையொட்டிய சமூக வலைதள விவகாரங்களில் எப்போதாவது நடிகர்களே தலையிட்டு அது பெரும் சர்ச்சையாவதும் உண்டு. அந்தவகையில் தற்போது சர்ச்சையில் சிக்கியவர் காமெடி நடிகர் கருணாகரன்.

சமீபத்தில் நடந்த சர்கார் ஆடியோ வெளியீடு குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட, அது சிலருக்கு கடுப்பேற்றவே கருணாகரனை வசைபாடத் தொடங்கினர். பதிலுக்கு கருணாகரனும் தொடர்ச்சியாக சில பதிவுகளை பதிவிட, அதற்கு மீண்டும் எதிர் தரப்பிலிருந்து வசைகள் தொடர்ந்தன. இந்த விவகாரம் இப்படியாகப் போய்க்கொண்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் கருணாகரனின் சம்பந்தப்பட்ட அந்த ட்விட்டர் கணக்கு முடங்கியுள்ளது. கருணாகரனே அதை முடக்கியுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon