மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 அக் 2018

பண்டிகைக் காலத்தில் விலை உயராது!

பண்டிகைக் காலத்தில் விலை உயராது!

பண்டிகைக் காலம் முடியும் வரை வாகனங்களின் விலை உயர்த்தப்படாது என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் வாகனச் சந்தை கடும் நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில் இதன் தாக்கத்தைப் பண்டிகைக் காலத்துக்குப் பிறகு நுகர்வோருக்கு வழங்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ரூபாய் வீழ்ச்சியால் ஏற்பட்ட நெருக்கடியால் வாகனங்களின் விலையைத் தற்போது உயர்த்தினால் பண்டிகைக் கால விற்பனை பாதிக்கப்படும். ஆகையால் பண்டிகைக் காலம் நிறைவுபெற்ற பிறகு வாகனங்களின் விலையைக் குறைக்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவின் தலைவரான மாயன்க் பரீக், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இது ஒரு பெரும் நெருக்கடியாக உள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 20 முதல் 30 விழுக்காட்டுப் பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்து வருகிறோம்” என்று கூறினார். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இறக்குமதியை நம்பியிருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் போராடி வருகிறது. நெருக்கடியைச் சமாளிக்க வாகனங்களின் விலை உயர்த்தப்படுமா என்று அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “நாங்கள் கவனித்து வருகிறோம். ஆனால், பண்டிகைக் காலத்தில் நாங்கள் விலைகளைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை” என்று கூறினார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon