மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: மசோதா நிறைவேற்றம்!

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: மசோதா நிறைவேற்றம்!

இலங்கை இறுதிக்கட்ட போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டு ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வந்தது. யுத்தம் காரணமாகப் பலர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர். கடந்த 2009ஆம் ஆண்டு இந்த யுத்தம் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட போரில் ஒரு லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் பலியாகி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (அக்டோபர் 10) நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அனைத்து மக்களின் உரிமைகளுக்காகவும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாகவும் வடக்கு பகுதியில் மட்டுமல்ல; தெற்கு பகுதியிலும் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். இழப்பீடு செய்யப்பட வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 59 பேரும் எதிராக 43 பேரும் வாக்களித்துள்ளனர். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌ஷேவின் ஆதரவாளர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க, ராணுவத்துக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அண்மையில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon