மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

ஐந்தே நாட்களில் ஒரு பில்லியன் டாலர்!

ஐந்தே நாட்களில் ஒரு பில்லியன் டாலர்!

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஐந்தே நாட்களில் ஒரு பில்லியன் டாலருக்கு ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்யுமென்று ஆய்வு ஒன்றில் மதிப்பிடப்பட்டுள்ளது.

அமேசான், ஃப்ளிப்கார்ட், பேடிஎம் மால் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் ஸ்மார்ட் போன் விற்பனை ஐந்து நாட்களில் ஒரு பில்லியன் டாலரை எட்டும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. புதிதாக அறிமுகமாகியுள்ள போன்கள், விலைக் குறைப்பு, எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் போன்ற சலுகைகளால் மேற்கூறிய நிறுவனங்கள் ஐந்தே நாட்களில் ஒரு பில்லியன் டாலருக்கு ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்யும் என்று ஆய்வு நிறுவனமான கவுன்ட்டர் பாயின்ட் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் விற்பனையில் ஆன்லைன் நிறுவனங்கள் 42 விழுக்காடு பங்கு வகிப்பதால், இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

அக்டோபர் 10 முதல் 15 வரையிலான ஐந்து நாட்களில் மட்டும் கடந்த ஆண்டில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த ஸ்மார்ட் போன் விற்பனையைக் காட்டிலும் அதிக விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் ஆன்லைன் நிறுவனங்கள் வாயிலாக பல்வேறு விலைகளில் புதிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகியுள்ளதால் இந்த வளர்ச்சி சாத்தியம் என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்த ஆன்லைன் ஸ்மார்ட் போன் விற்பனையில் சீன பிராண்டுகளின் பங்கு 70 விழுக்காட்டை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon