மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

ஒருநாள் போட்டி: இந்திய அணி அறிவிப்பு!

ஒருநாள் போட்டி: இந்திய அணி அறிவிப்பு!

மேற்கு இந்தியத் தீவுகளுடனான ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி வருகிற 21ஆம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்க்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 12) ஹைதராபாத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளில் அணி சந்திந்த தோல்வியால் அந்நாட்டு முன்னாள் வீரர்களின் விமர்சனத்தையும் அந்த அணி சந்தித்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி கூடுதல் கவனம் செலுத்தி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிய கோப்பைத் தொடரில் ஓய்விலிருந்த இந்தியக் கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். பிசிசிஐ அறிவித்துள்ள 14 பேர் அணியினரின் விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே, மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த், ஜடேஜா, சாஹல், குல்தீப், கலீல் அகமது, ஷர்துல் தாகூர், கே.எல்.ராகுல்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon