மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

லாபத்தில் பறக்குமா இந்திய விமானங்கள்?

லாபத்தில் பறக்குமா இந்திய விமானங்கள்?

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தவும், விமான நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்கவும் அரசு தரப்பிலிருந்து நிதிச் சலுகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் ஷம்ஷாபாத் நகரில் புதிய விமான முனையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை செயலாளரான ராஜிவ் நயன் சவுபே கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், “விமானத் துறையின் வளர்ச்சியை நாங்கள் மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். கடந்த இரண்டு காலாண்டுகளாகவே விமான நிறுவனங்கள் கடுமையான இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக விமான நிறுவனங்களின் நிதிநிலை மிக மோசமாக இருக்கிறது.

எனவே, நாங்கள் விமான நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தேவையான வழிமுறைகளைக் கண்டறிந்து வருகிறோம். ஏர் இந்தியா விமான நிறுவனத்தைப் பொறுத்தவரையில் அதன் பங்கு விற்பனைக்கான முடிவைத் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துள்ளோம். பொருளாதாரக் காரணிகள் சீரானவுடன் அதுகுறித்து முடிவெடுக்கப்படும். ஏர் இந்தியாவை இத்துறையில் தொடர்ந்து இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். அதற்கான நிதிச் சலுகை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் விமானப் பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இத்துறையில் சீனாவை விட அதிகமான வளர்ச்சியை நாம் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon