மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

மல்யுத்தம்: உலகத் தரவரிசையில் இந்தியர்!

மல்யுத்தம்: உலகத் தரவரிசையில் இந்தியர்!

மல்யுத்த வீரர்களுக்கான உலகத் தரவரிசையில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த மாதம் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் ஹங்கேரியில் உள்ள புத்தாபெஸ்ட்டில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு இதுவரையில் ரேண்டம் அடிப்படையில் மட்டுமே தரநிலை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் வீரர்களின் வெற்றி, தோல்வி அடிப்படையில் தரநிலைகள் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய வீரரான பஜ்ரங் புனியா 65 கிலோ எடைப்பிரிவில் 45 புள்ளிகளைப் பெற்றுள்ளார். தரவரிசையில் யாரும் 50 புள்ளிகளுக்கு மேல் பெறவில்லை.

இதனால் தரவரிசையில் பஜ்ரங் புனியாவுக்கு 3ஆவது இடம் கிடைத்துள்ளது. 50 புள்ளிகளைப் பெற்றுள்ள துருக்கி வீரர் செலகாட்டின் தரவரிசையில் முதலிடத்தையும், ரஷியாவைச் சேர்ந்த பெக்புலாட்டோவ் 2ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். அண்மைக்காலமாக மல்யுத்தத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பஜ்ரங் புனியாதான் முதல்முறையாக இந்த தரவரிசையில் இடம்பிடித்த இந்தியராவார். 24 வயது நிரம்பிய இவர் ஹரியானா மாநிலத்தின் ஜாஜர் மாவட்டத்தில் உள்ள குடான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த ஆண்டு ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் இவர் வென்றுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கான இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதையும் இவர் பெற்றுள்ளார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon