மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

நல்லங்குகள் பற்றித் தெரியுமா?

நல்லங்குகள் பற்றித் தெரியுமா?

தினப் பெட்டகம் – 10 (12.10.2018)

ஆர்மடில்லோ பற்றி:

1. ஆர்மடில்லோ எனும் பாலூட்டி நாம் பெரும்பாலும் கேள்விப்படாத விலங்கு; ஆர்மடில்லோவின் தமிழ்ப்பெயர் “நல்லங்கு”.

2. பாலூட்டிகளில், உடல் முழுவதும் கடினமான ஓட்டால் மூடப்பட்டிருக்கும் ஒரே மிருகம், நல்லங்கு.

3. நல்லங்குகள் பெரும்பாலும் அமெரிக்காவில்தான் அதிகம் காணப்படுகின்றன; ஒரே ஒரு இனம் வடஅமெரிக்காவிலும், 19 இனங்கள் தென்அமெரிக்காவிலும் வாழ்கின்றன.

4. அவற்றின் நீளம் 5 முதல் 60 அங்குலம்வரை இருக்கலாம்.

5. நல்லங்குகளின் எடை 3 முதல் 120 பவுண்ட் வரை மாறுபடும்.

6. நல்லங்குகள் பிங்க் நிறம், அடர் பிரவுன் நிறம், கறுப்பு நிறம், சிகப்பு நிறம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.

7. ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணி நேரங்கள் வரை அவை உறங்குகின்றன.

8. நல்லங்குகளின் இனப் பெருக்கம் மிகவும் வித்தியாசமானது; ஜூலை மாதம்தான் அவற்றின் இனப் பெருக்கக் காலம் என்றாலும், நவம்பரில்தான் அவை கருத்தரிக்கின்றன. இதைத் தாமதிக்கப்பட்ட கருவுறுதல் (delayed implantation) என்று சொல்வார்கள். காலநிலை சரியாக அமையும் வரை அவற்றால், கருத்தரிப்பைத் தள்ளிப்போட முடியும். ஒரு முட்டையிலிருந்து நான்கு நல்லங்குக் குட்டிகள் பிறக்கின்றன.

9. நல்லங்குகள் பிறக்கும்போது அவற்றின் தோல் மிகவும் மிருதுவாக இருக்கும். சில வாரங்களுக்குப் பிறகே ஓடுகளாக அவை மாறும்.

10. காடுகளில் 4-7 ஆண்டுகள் வரையிலும், பிடித்து அடைத்து வைத்து வளர்த்தால் 12-15 ஆண்டுகள் வரையிலும் வாழக்கூடியவை நல்லங்குகள்.

- ஆஸிஃபா

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon