மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

பாபா கொடுத்த ஒன்பது ரூபாய்!

 பாபா கொடுத்த ஒன்பது ரூபாய்!

விளம்பரம்

சாய்பாபா ராம விஜயத்தைக் கேட்டுக் கொண்டே இருக்க, சீடர் வாகேவின் வாய் குழற ஆரம்பித்தது. அதைக்கேட்டதும் பாபா, ‘வாசித்தது போதும்’ என்று கைகளை நீட்டி நிறுத்தச் சொன்னார்.

பாபா ஏன் நிறுத்தச் சொன்னார் என்பது பிறகுதான் தெரிந்தது.

ஸ்ரீ சாய் சரித்திரம் என்ன சொல்கிறது என்பதை இதோ தருகிறோம்.

“அதுவரை கண் மூடி ராமவிஜயம் கேட்டு வந்த பாபா, தனது சீடர் வாகேவின் வாய் குழற ஆரம்பித்த பின் ராம விஜயம்வாசிப்பதை நிறுத்தினார். அதுவரை எண்ணற்ற முறை ராம விஜயத்தை தன் காதுகளால் கேட்டு மனதுக்குள் செலுத்தி ராம பிரானில் லயித்துக்கிடந்தார் சாய்பாபா.

அதன் பிறகு தன் நெருக்கமான பக்தர்களிடம் கூட பேசுவதை நிறுத்தி விட்டார். விஜயதசமிக்கு இன்னும் இரு தினங்கள் இருந்தன. அப்போது ஊரெங்கும் நவராத்திரி கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. இன்னும் சில தினங்களில் அதிர்ச்சி தரத்தக்க ஒன்று நடக்கப் போவது தெரியாமல் பலரும் தங்கள் வீடுகளில் கொலு வைத்திருந்தனர்.

பாபா விஜயதசமிக்கு இரு நாட்கள் இருக்கும்போதே உணவு உண்ணுவதை நிறுத்திவிட்டார். அவரைக் கண்ட சீடர்கள் எல்லாம் கண் கலங்கினார்கள். ஏகப்பட்ட பேர் சாவடிக்கும், துவாரக மயிக்கும் பாபாவைத் தேடிப் போய் அவரை காணாமல் பின் விசாரித்து புதிய கட்டிடத்துக்கு ஓடி வந்தார்கள்.

பாபா முற்றிலும் தளர்ந்து போயிருந்தார். அந்தக் கண்களின் ஒளி மட்டும் குறையவில்லை. அன்பு சுரந்த முகம் வாடியிருந்தது. அவரைக் காண வரும் பக்தர்கள் வழக்கமாக சில மணி நேரங்களில் கிளம்பிவிடுவார்கள். ஆனால் இந்த நிலையில் பாபாவை விட்டுப் போக மனமில்லாமல் பார்க்க வந்த சீடர்கள் எல்லாம் அங்கேயே அமர்ந்தனர்.

சாய்பாபாவைச் சுற்றி கூட்டம் அதிகரித்தது.ஆனால் அவரிடம் இருந்து ஒருவார்த்தை வரவில்லை. பாபா, பாபா என்று கூட்டம் போற்றிகளை பாடிக் கொண்டிருந்தது. பாபாவின் அசாதாரணமான தோற்றம் அவர்களை நிலைகுலைய வைத்தது.

விஜயதசமி தினத்தன்று... காலை ஆரத்தியும், மதியம் ஆரத்தியும் பாபாவுக்கு நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கு மேல் பக்தர்களை அங்கிருந்து சற்று வெளியே சென்று காத்திருக்குமாறு புதிய கட்டிட பொறுப்பாளர்கள் கூறினார்கள்.

பக்தர்கள் அனைவரும் கலைந்து சென்ற பிறகு காகா சாகேப் தீட்சித், பாபு சாகேப் தீட்சித், மகல்சாபதி பாகோஜி ஷிண்டே, பாயாஜிபாய், நானா சாகேப், நிமோன்கர், ஷாமா, லட்சுமண் பாபா ஷிண்டே ஆகியோர் மசூதியில் இருந்தனர்.

அப்போது லட்சுமிபாயை அழைத்தார் பாபா. சில வார்த்தைகள் பேசினார். லட்சுமி பாய்க்கு ஆனந்தக் கண்ணீர் அணை உடைத்த வெள்ளமாய் பாய்ந்தது. பாபாவை லட்சுமியை பாயை அழைத்து, “இதுவரை நான் உனக்கு எதுவுமே செய்யவில்லையே... இந்தா” என்று தனது அங்கிக்குள் கையை விட்டு ஐந்து ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தார். பின் மீண்டும் உடைக்குள் கையை விட்டு சில நாணயங்களை எடுத்து லட்சுமியிடம் கொடுத்தார். அதில் நான்கு ரூபாய்கள் இருந்தன.

லட்சுமி மிகப் பணக்காரப் பெண். அவளுக்கு இந்த ஒன்பது ரூபாய் என்பது மிகச் சாதாரண பணம். ஆனால் அதை பாபா கொடுத்ததால் அவருக்கு அதுவே மிகப்பெரும் பொக்கிஷமானது.

பாபாவின் கையால் கடைசியாக ஆசி பெற்றவர் லட்சுமிதான் என்பது இன்றுவரை அனைத்து சாய் பக்தர்களும் நினைந்து நினைந்துநெகிழக் கூடிய விஷயம்.

அக்கரைப்பட்டி சாய்பாபா மந்திர் ஆலயத்தில் நவராத்திரி விழாக்கள் உற்சாகமாக நடந்துகொண்டிருக்கின்றன. ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்டின் சார்பாக நவராத்திரி விழாவும், விஜய தசமியும் மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்.

சாய்பாபாவின் 100 ஆவது எல்லை கடந்த திருநாளை அக்கரைப்பட்டியில் காண அனைவரும் வாருங்கள்!

பாபா பரவசம் தொடரும்...

SREE SAI KARPAGAVIRUKSHA TRUST
[Public Charitable Trust Regd. No. 1379/2009]
475/4A4, Akkaraipatti, Kariyamanickam Road
Near Samayapuram, Mannachanallur TK
Trichy Dt, TN, India 621112.
[email protected]
http://akkaraipattisaibaba.com/

விளம்பர பகுதி

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon