மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

தமிழக ஆலைகளுக்கு நிதி!

தமிழக ஆலைகளுக்கு நிதி!

தமிழகத்தில் உள்ள தோல் பொருள் ஆலைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகச் சிறப்பு நிதியுதவித் திட்டம் ஒன்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய காலணி மற்றும் தோல் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2,600 கோடியைச் செலவிடுவதற்கு இந்த ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது. தோல் பொருள் துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது, கூடுதல் முதலீடுகளுக்கு வழிவகை செய்வது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, உற்பத்தியை அதிகரிப்பது போன்றவை இத்திட்டத்தின் குறிக்கோள்களாக உள்ளன.

வரிச் சலுகைகளை வழங்குவதன் வாயிலாக மிகப்பெரிய அளவில் முதலீடுகளை ஈர்க்க முடியும். தமிழகத்தில் உள்ள தோல் பொருள் தொழில் துறைக்கு உத்வேகம் கொடுக்கும் வகையிலும், உள்கட்டமைப்பையும், வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்தும் நோக்கிலும் நான்கு திட்டங்களுக்கு தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. திருச்சியில் உள்ள ஆலை, குரோம்பேட்டையில் உள்ள ஆலை, ராணிப்பேட்டையில் உள்ள ஆலை, பெருந்துறையில் உள்ள ஆலை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இத்திட்டங்கள் முயல்கின்றன.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon