மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

வெள்ளிப் பதக்கம் வென்ற சுந்தர் சிங்!

வெள்ளிப் பதக்கம் வென்ற சுந்தர் சிங்!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

மூன்றாவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் இந்தோநேஷியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (அக்டோபர் 11) நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் ஆண்களுக்கான எஃப் 46 பிரிவில் இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதே பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீரரான ரிங்கு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும் 400மீ ஈட்டி எறிதல் டி13 பிரிவில் இந்தியாவின் அன்வில் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

சுந்தர் சிங் குர்ஜர் இந்தத் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக ஃபின்லாந்து நாட்டில் தங்கி 22 நாட்கள் பயிற்சி பெற்றுள்ளார். இந்திய விளையாட்டு ஆணையத்தின் உதவியுடன் இந்தப் பயிற்சியை சுந்தர் சிங் குர்ஜர் பெற்றுள்ளார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் முந்தைய 2 தொடர்களைக் காட்டிலும், இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் கூடுதல் பதக்கங்களை வென்று வருகின்றனர்.

வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், டேபிள் டென்னிஸ், செஸ், குண்டு எறிதல், பளுதூக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உட்பட 45க்கும் அதிகமான பதக்கங்களை இதுவரையில் இந்திய வீரர்கள் வென்றுள்ளனர். இதில் 7 தங்கப் பதக்கமும் அடங்கும். அக்டோபர் 16ஆம் தேதி வரையில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளதால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon