மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

2ஆவது டெஸ்ட்: யார் யாருக்கு வாய்ப்பு?

2ஆவது டெஸ்ட்: யார் யாருக்கு வாய்ப்பு?

மேற்கு இந்தியத் தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை (அக்டோபர் 12) பெங்களூருவில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் கடந்த ஆட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றிருந்த மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூன்று பேரும் இடம் பெறவில்லை. இவர்களுக்கு மாற்றாக வேறு யாரும் இணைக்கப்படவில்லை. எனவே 12 பேர் கொண்ட அணி மட்டுமே இரண்டாவது போட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூவரும் ஆட்டத்தில் பங்கேற்கும் 11 பேர் கொண்ட அணியில் இணைக்கப்பட வாய்ப்புகள் குறைவே. இதனால் அணிக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருவதால் அதில் இவர்கள் மூவரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய போட்டியில் 3 வேகப்பந்து வீச்சாளர்களைக் களமிறக்க முடிவு செய்தால் மட்டும் ஷர்துல் தாகூர் அணியில் இணைக்கப்பட்டு வேறொருவருக்கு ஓய்வளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில் கடந்த ஆட்டத்தில் களமிறங்கிய அதே அணியே இம்முறையும் களமிறங்கும்.

12 பேர் கொண்ட அணியில் பங்கேற்கும் வீரர்களின் பெயர்கள்: விராட் கோலி (கேப்டன்), பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல், ரகானே, ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அஸ்வின், ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புஜாரா, ஷர்துல் தாகுல்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon