மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

தங்கம் இறக்குமதியைக் குறைத்த ரூபாய்!

தங்கம் இறக்குமதியைக் குறைத்த ரூபாய்!

ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக இந்தியாவின் செப்டம்பர் மாதத்துக்கான தங்கம் இறக்குமதி 14 சதவிகிதம் குறைந்துள்ளது.

சமீப காலமாகவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ரூ.74.38 ஆக உள்ளது. ரூபாய் வீழ்ச்சி காரணமாக இந்தியாவின் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. தங்கத்தைப் பொறுத்தவரையில், உலகின் இரண்டாவது மிகப் பெரிய தங்கம் இறக்குமதியாளராக உள்ள இந்தியா, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 85.7 டன் அளவிலான தங்கத்தை இறக்குமதி செய்திருந்தது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 14 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. அதேபோல, ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் 15 சதவிகித சரிவுடன் இந்தியா மொத்தம் 552.8 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறது.

தங்கம் இறக்குமதி குறைந்திருந்தாலும், அதனால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை குறையும் என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். பொதுவாகவே இந்தியாவில் ஆண்டு இறுதியில் தங்கத்துக்கான தேவை அதிகமாக இருக்கும். பண்டிகை சீசன் மற்றும் திருமண முகூர்த்த தினங்களை முன்னிட்டு தங்கம் விற்பனை சூடுபிடிக்கும். முந்தைய மாதங்களில் ரூபாய் மதிப்பு சரிவால் தங்கம் இறக்குமதி குறைந்திருந்தாலும் பண்டிகை சீசனை முன்னிட்டு அக்டோபர் மாதத்தில் தங்கம் இறக்குமதி மீண்டும் உயரும் என கொல்கத்தாவைச் சேர்ந்த தங்கம் வர்த்தகரான பச்ராஜ் பமல்வா ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon