மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

பிக் பிரதராகும் ‘பிக் பாஸ்’ நாயகன்!

பிக் பிரதராகும் ‘பிக் பாஸ்’ நாயகன்!

விஜய் மற்றும் விஜயகாந்த் நடித்த படங்களை இயக்கிக் கவனம்பெற்ற இயக்குநர் சித்திக்கின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடித்த ஃபிரண்ட்ஸ், காவலன் மற்றும் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் வாயிலாகக் கவனம்பெற்றவர் இயக்குநர் சித்திக். தனது படங்களில் வடிவேலுவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகைச்சுவையில் கலக்கியதன் வாயிலாகத் தனித்த கவனம்பெற்ற சித்திக் சமீபத்தில் அரவிந்த்சாமியை வைத்து பாஸ்கர் தி ராஸ்கல் எனும் படத்தை இயக்கினார், இப்படம் பெரிய அளவிலான கவனத்தைப் பெறவில்லை.

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கு தற்போது ஆயத்தமாகிவருகிறார் சித்திக். ஆனால் இம்முறை தமிழில் அல்ல மலையாளத்தில். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிஸி காட்டிவரும் நடிகர் மோகன்லால்தான் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். பிக் பிரதர் எனப்பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மோகன்லால் தற்போது ஓடியன், லுஸிஃபெர், காயம்குளம் கொச்சுண்ணி,ட்ராமா உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon