மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்காத இந்தியா!

ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்காத இந்தியா!

ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு இந்தியா முயற்சியே எடுப்பதில்லை என ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முயற்சி எடுக்கும் நாடுகள் குறித்த பட்டியலை இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்பாம் இண்டெர்நேஷனல் நிறுவனம் அக்டோபர் 9ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க அந்நாடு எடுக்கும் முயற்சிகள் மற்றும் பொறுப்புகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா கடைசி பத்து இடங்களுக்குள்தான் உள்ளது. 157 நாடுகள் அடங்கிய இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 147ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு இந்தியா எடுக்கும் முயற்சிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

’இந்தியா தனது நாட்டிலுள்ள ஏற்றத்தாழ்வுகளில் மூன்றில் ஒரு பகுதியைக் குறைப்பதற்கு முயற்சி எடுத்தாலும் கூட 17 கோடி மக்கள் ஏழைகளாக இருக்க மாட்டார்கள் என்று ஆக்ஸ்பாம் கணக்கிட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு போன்றவற்றில் அரசின் செலவினம் மிகக் குறைவாக உள்ளது. மேலும் தனியார் துறைக்கு அரசால் அடிக்கடி மானியம் வழங்கப்படுகிறது’ என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தென்கொரியா, நமீபியா, உருகுவே ஆகிய நாடுகள் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்தியா, அமெரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகள் மிகவும் மோசமாகச் செயல்பட்டு வருவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon