மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 16 ஜன 2021

லாராவாலேயே பெற முடியாத வெற்றி!

லாராவாலேயே பெற முடியாத வெற்றி!

லாரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இருந்தபோதும்கூட இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் வெற்றி பெறவில்லை என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறியுள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் இந்தத் தோல்வி குறித்து அந்நாட்டில் விமர்சனங்கள் எழுந்தன. போதிய அனுபவம் இல்லாத புதிய வீரர்களைக் கொண்ட அணி என்றாலும்கூட, இத்தோல்வியை அந்நாட்டின் சில முன்னாள் வீரர்களும் விமர்சனம் செய்துள்ளனர். இந்த விமர்சனங்களுக்கு தற்போது ஜேசன் ஹோல்டெர் பதிலளித்துள்ளார்.

ஜேசன் ஹோல்டர் இதுபற்றி கூறுகையில், “இறுதியாக 1993ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றுள்ளது. லாரா போன்ற தலைசிறந்த வீரர்கள் அணியில் இருந்தபோதும் தான் இந்திய மண்ணில் நாம் வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது மட்டும் ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் வைக்கிறார்கள் என்று புரியவில்லை. கடந்த ஆண்டில் 4 அல்லது 5 தொடர்களில் விளையாடி 2 தொடர்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon