மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: சுருள் போளி!

கிச்சன் கீர்த்தனா: சுருள் போளி!

குழந்தைகளுக்குத் தினமும் என்ன ஸ்நாக்ஸ் செஞ்சுக் கொடுக்குறதுன்னு புலம்புகிற அம்மாக்களுக்காக இன்னிக்குக் கொஞ்சம் வித்தியாசமான ஸ்நாக்ஸ் பார்க்கலாம். பொதுவாகவே போளி என்றால், தேங்காய் போளி, பருப்பு போளி அப்படின்னுதான் கேள்விபட்டிருப்பீங்க. இன்னிக்குச் சற்று மாறுதலாக கடலைப் பருப்பு, முந்திரி கலந்த மைதாவுடன் சேர்ந்த சுருள் போளியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

மைதா மாவு – அரை கிலோ

சோடா உப்பு – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

பொட்டுக்கடலை – 200 கிராம்

சர்க்கரை – 200 கிராம்

வறுத்த வெள்ளை எள் – 50 கிராம்

ஏலக்காய் – 4

வறுக்க

நெய் – 1 டேபிள்ஸ்பூன்

உடைத்த முந்திரி – 10

திராட்சை - 10

செய்முறை

முதலில் சிறிது நீரில் உப்பையும் சோடா உப்பையும் கலந்து மைதாவில் சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.

பின்னர் பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். அதன்பின்னர், மிக்ஸியில் பொட்டுக்கடலையைப் போட்டு மாவாகத் திரித்து வைத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை மாவுடன் சர்க்கரை, வறுத்த எள், பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையைச் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

அதன்பின், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வட்டமாகத் தேய்த்த மாவைப் போட்டு பூரிகளாகச் சுட்டு எடுக்கவும்.

பூரி சூடாக இருக்கும்போதே அதன் நடுவில் பொட்டுக்கடலை மாவு கலவையைப் பரவலாக வைத்துச் சுருட்டி வைக்கவும். அவ்வளவுதான் சுருள் போளி ரெடி!

புதன், 10 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon