மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

ஆன்லைனில் பெருகும் வேலைவாய்ப்புகள்!

ஆன்லைனில் பெருகும் வேலைவாய்ப்புகள்!

சென்ற செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கைகள் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

மான்ஸ்டர்.காம் இணையதளம் சார்பாக ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஆள் சேர்ப்பு விகிதம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் மான்ஸ்டர் வேலைவாய்ப்புக் குறியீடு 4 புள்ளிகள் உயர்ந்து 270 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறையில் ஆன்லைன் வேலைவாய்ப்புகள் 69 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளன. புதிதாக வேலை தேடுவோர் முதல் மூன்று வருட அனுபவம் கொண்ட பணியாளர்களுக்கு அதிக தேவை இருந்ததாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இந்தியாவை மிகப் பெரிய உற்பத்தி மையமாக மேம்படுத்தும் முயற்சியில் 'மேக் இன் இந்தியா' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இந்தியா அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. எனவே, மற்ற துறைகளைக் காட்டிலும் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக மான்ஸ்டர் ஆய்வு கூறுகிறது. உற்பத்தித் துறையைத் தொடர்ந்து சில்லறை விற்பனைத் துறை 36 சதவிகித வளர்ச்சியையும், சுகாதாரப் பாதுகாப்புத் துறை 15 சதவிகித வளர்ச்சியையும், மனிதவளம் மற்றும் மேலாண்மைத் துறை 14 சதவிகித வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.

புதன், 10 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon