மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

வங்கிப் பணம்: வலுவடையும் பாதுகாப்பு!

வங்கிப் பணம்: வலுவடையும் பாதுகாப்பு!

ரொக்கப் போக்குவரத்துக்கு ரிசர்வ் வங்கியின் புதிய வழிமுறைகளால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தொழில் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி அமைப்புக்குள் தினசரி அடிப்படையில் சுமார் ரூ.15,000 கோடி ரொக்கத்தை, ரொக்கப் போக்குவரத்து நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன. இத்தொழிலுக்கு ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய வழிமுறைகளால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும், பாதுகாப்பு மேலும் மேம்படும் எனவும் தொழில் துறை கருதுகிறது. புதிய விதிமுறைகளால் இந்திய நிறுவனங்களின் தரமும், தொழிலும் உலகத் தரத்துக்கு நிகராக உயரும் எனவும் பொதுமக்களின் பணத்துக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் ரொக்கப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், புதிய விதிமுறைகளால் குறுகிய கால அடிப்படையில் தொழில் செலவுகள் அதிகரிக்கும் எனவும், நீண்டகால அடிப்படையில் திறன் மேம்படும் எனவும், மோசடிகள் குறையும் எனவும் தொழில் துறை கருதுகிறது.

புதிய விதிமுறைகளைக் கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டுமென்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. எஸ்ஐஎஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநரான ரித்துராஜ் சின்ஹா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “ரொக்கப் போக்குவரத்தில் குறைந்தபட்ச தரநிலைகளை வகுத்ததற்காக ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு நாங்கள் வரவேற்பளிக்கிறோம். ரிசர்வ் வங்கியின் வழிமுறைகள் சர்வதேசத் தரநிலைகளுக்கு நிகராக உள்ளது. பெரும்பாலான வளர்ந்த பொருளாதாரங்களில் மத்திய வங்கிகளே ரொக்கத்தை நிர்வகிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon