மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

சுற்றுலா: இந்தியா - ருமேனியா ஒப்பந்தம்!

சுற்றுலா: இந்தியா - ருமேனியா ஒப்பந்தம்!

சுற்றுலாத் துறையில் இணைந்து செயல்படும் விதமாக ருமேனியா நாட்டுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்ற செப்டம்பர் மாதத்தில் ருமேனியா நாட்டின் துணை அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது சுற்றுலாத் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. இதற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அக்டோபர் 10ஆம் தேதி (நேற்று) ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுலாத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது, சுற்றுலா தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகளைப் பரிமாறிக்கொள்வது, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் முதலீடுகளை அதிகரிப்பது ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்தியாவின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் ருமேனியா நாடு முக்கியப் பங்கு வகுக்கிறது. 2017ஆம் ஆண்டில் ருமேனியாவிலிருந்து சுமார் 11,844 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை புரிந்திருந்தனர். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று மத்திய சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களை இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளச் செய்வதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon