மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

என்ன ரகசியம் அது?

அதிசயத் தட்டு பரியைத் தண்ணீருக்கு வெளியே தள்ளிக்கிட்டு வந்துச்சு. பரி கொஞ்சம் கொஞ்சமா மூச்சுவிட்டான். அதிசயத் தட்டு மேல இருந்த பயத்தை முழுசா விட்டான்.

அதிசயத் தட்டு அதிசயமா பேசுச்சு..!

"எந்திரி பரி. நான் உன்கிட்ட பேசணும்."

பரிக்குப் போன பயம் திரும்பிருச்சு.

"நீ பேசுவியா..?"ன்னு கேட்டான் பரி.

"உன்கிட்ட பேசணும்னுதான் கனவுல வருவேன். ஆனா, நீ முழுச்சிடுவ! அதனால பேச முடியல. இப்போ மயக்கத்துல இருந்ததால உன்னால எழ முடியல. எனவே என்னால உன்கூட பேச முடியுது"ன்னு சொன்னது அதிசயத் தட்டு.

"நீ என்ன எங்கேயோ கூப்டு போவ. அது இருட்டான இடமா இருக்கும். அதனாலதான் பயந்து எழுந்திடுவேன்."

"எங்கேயோ இல்ல. நீ தினமும் பாத்து ரசிப்பியே... அந்த நட்சத்திரங்கள் கிட்டத்தான் கூப்பிட்டுப் போவேன். ஆனா, அதுக்குள்ளே நீ முழிச்சிக்குவ."

"ஏன் நட்சத்திரங்களை பார்த்துட்டு தூங்கும்போது மட்டும் நீ கனவுல வர்றதில்லை?"

"அந்த ரகசியத்தை நான் உன்கிட்ட சொல்லக் கூடாது. நீ எப்போ தகுதியா இருக்கியோ... அப்போ உனக்கே அந்த ரகசியம் தெரியும்."

"அப்படி என்ன தகுதி வேணும் எனக்கு?"

- நரேஷ்

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon