மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா நியமனம்!

சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா  நியமனம்!

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசில் அட்டார்னி ஜெனரலுக்கு அடுத்ததாக இரண்டாவது முக்கிய பதவியாக சொலிசிட்டர் ஜெனரல் பதவி கருதப்படுகிறது. இப்பதவியில் இருந்த மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இந்தப் பதவி கடந்த 11 மாதங்களாக காலியாவே இருந்து வந்தது. இந்த நிலையில் சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா நேற்று (அக்டோபர் 10) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார்.

மேத்தாவின் நியமனத்துக்கு மத்திய அமைச்சரவையில் நியமனக் குழு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், வரும் 2020ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி வரை அவர் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகிப்பார்.

2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட துஷார் மேத்தா, 66-ஏ தொழில்நுட்பச் சட்ட வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளில் மத்திய அரசுக்காக ஆஜராகியுள்ளார். 2ஜி மேல்முறையீட்டு வழக்கின் சிறப்பு வழக்கறிஞராகவும் உள்ளார். குஜராத் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் பதவி வகித்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராகக் கடந்த 10 வருடங்களுக்கு மேல் இருந்துவரும் மேத்தா, சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கு உட்பட பல வழக்குகளுக்கு அமித் ஷாவின் முக்கிய சட்ட ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon