மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

நான்கு நாட்களில் வடகிழக்குப் பருவ மழை!

நான்கு நாட்களில் வடகிழக்குப் பருவ மழை!

நான்கு நாட்களுக்குப் பிறகு, வடகிழக்குப் பருவ மழை துவங்க வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 11) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வடகிழக்குப் பருவமழைதொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அக்டோபர் 8ஆம் தேதியன்று வடகிழக்குப் பருவமழை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் புயல் சின்னம் உருவானதால், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. தற்போது, அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகம், புதுவையின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். “சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்” என்று தெரிவித்துள்ளது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon