மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

லாபப் பங்கைக் குறைக்கும் திட்டமில்லை!

லாபப் பங்கைக் குறைக்கும் திட்டமில்லை!

எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களிடமிருந்து தனது லாபப் பங்கைக் குறைக்கப்போவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசலுக்கான விலையில் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாயைக் குறைக்குமாறு எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதனால் ஏற்கெனவே எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் கடும் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளன. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அரசிடமிருந்து எவ்வித நிவாரணத்தையும் அந்நிறுவனங்கள் எதிர்பார்க்க முடியாது எனத் தெரிகிறது. ஏனெனில், அந்நிறுவனங்களிடமிருந்து வரும் லாபப் பங்கைக் குறைத்துக்கொள்ள மத்திய அரசு விரும்பவில்லை. லாபப் பங்கைக் குறைத்துக்கொள்ள அரசு எதிர்பார்க்கவில்லை என்று நிதியமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-19ஆம் நிதியாண்டில் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்தும் ரூ.52,494 கோடியை லாபப் பங்காகப் பெறுவதற்கு பட்ஜெட் போடப்பட்டுள்ளது. அரசு தனது லாபப் பங்கைக் குறைத்துக் கொள்ளப்போவதாகவும், மானியத்தைக் குறைக்கப்போவதாகவும் சில செய்திகள் பரவின. இதற்கு விளக்கமளிக்கும் விதமாகப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க் தனது ட்விட்டர் பக்கத்தில், "மானியத்தைக் குறைக்க எந்தவொரு திட்டமும் இல்லை. இந்தச் செய்திகள் அனைத்தும் போலியானவை. இவற்றில் எதுவுமே உண்மையில்லை" என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon