மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

அமிதாப்புக்கு பர்த்டே கிஃப்ட்!

அமிதாப்புக்கு பர்த்டே  கிஃப்ட்!

அமிதாப் பச்சன் நடித்துவரும் புதிய படத்திலிருந்து மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துவருகிறது.

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கைக் கதையைக் கொண்டு தயாராகிவரும் படம் சைரா நரசிம்மா ரெட்டி. இந்தப் படத்தில், சிரஞ்சீவி நரசிம்ம ரெட்டியாக நடிக்கிறார். அமிதாப் பச்சன் குரு கோசாயி வெங்கன்னா எனும் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி ஒப்பய்யா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராம் சரண் இப்படத்தை தயாரிக்கிறார்.

பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் இன்று தனது 76ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில் அவரது பிறந்தநாளை மேலும் சிறப்பிக்கும் விதமாக இப்படத்தில் அமிதாப் பச்சன் ஏற்றுள்ள ரோலின் மோஷன் போஸ்டர் இன்று (அக்டோபர் 11) வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரைத் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள ராம் சரண். “இந்திய சினிமாவின் மேதையான அமிதாப்பின் பிறந்த நாளில் அவரது கதாபாத்திர போஸ்டரை வெளியிடுவதில் பெருமை. தொடர்ந்து எங்களை நீங்கள் மகிழ்விக்க வேண்டும். தொடர்ந்து எங்களை வழிநடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை தாடி, காவி உடை என வயதான தோற்றத்தில் தோன்றியுள்ள அமிதாப்பின் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம்பெற்றுவருகிறது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon