மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

என்னால் மூன்றாம் உலகப் போர் உண்டாகும்!

என்னால் மூன்றாம் உலகப் போர் உண்டாகும்!

தான் அரசியலுக்கு வந்தால் மூன்றாம் உலகப் போர் உண்டாகும் என்று பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயலதிகாரியான இந்திரா நூயி தெரிவித்துள்ளார்.

தொழில் சாதனைகள், மகளிர் உரிமைகளுக்கான குரல் என இந்திரா நூயியின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு Game Changer of the Year Award விருதை ஆசிய சொசைட்டி அமைப்பு வழங்கியுள்ளது. லாபம் சாரா அமைப்பான ஆசிய சொசைட்டி, ஆசியாவின் முக்கியத்துவம் குறித்து உலகிற்கு எடுத்துரைத்துவருகிறது. பெப்சிகோ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி பொறுப்பிலிருந்து அண்மையில் இந்திரா நூயி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவையில் இந்திரா நூயி இணைய விரும்புகிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த நூயி, “எனக்கும் அரசியலுக்கும் சரிவராது. நான் மிகவும் வெளிப்படையாகப் பேசும் நபர். நான் சாதுரியமாகப் பேசக்கூடியவர் அல்ல. அரசியல் தந்திரம் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. ஆகையால், என்னால் மூன்றாம் உலகப் போர் உண்டாகிவிடும். அதனால் அதைச் செய்ய வேண்டாம்” என்று பேசியுள்ளார். 12 ஆண்டுகள் பெப்சிகோ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாகப் பணியாற்றிய இந்திரா நூயி, அக்டோபர் 2ஆம் தேதியன்று பதவியிலிருந்து வெளியேறினார். எனினும், 2019ஆம் ஆண்டின் தொடக்கம் வரையில் பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி தொடர்ந்து பதவி வகிப்பார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon