மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

டில்லியில ஒரு திண்டுக்கல்: அப்டேட்குமாரு

டில்லியில ஒரு திண்டுக்கல்: அப்டேட்குமாரு

டிவிட்டர்ல மீ டூ புயல் கடுமையா அடிச்சுகிட்டு இருந்தாலும் ஒரு குரூப் ஒதுங்கி வந்து ஜெயக்குமார் மேட்டரை பிடிச்சு கலாய்ச்சுகிட்டு இருக்குறாங்க. ‘திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகிறது’ன்னு மனுஷன் ஒரு வார்த்தை சொன்னதுக்கு டிசைன் டிசைனா கேள்வி கேட்குறாங்க. ஆனாலும் இவர் தினமும் மைக்க பிடிச்சு பேசுனாலும் செல்லூராருக்கும் ஹெச்.ராஜாவுக்கும் இருக்குற ஃபேன் ஃபாலோயிங் இவருக்கு என்னமோ இல்ல. திண்டுக்கல் சீனிவாசனும் ஜெயக்குமாருக்கு டஃப் கொடுப்பாரு. இருந்தாலும் நிதின் கட்கரி அவரை மாதிரியே பேச ட்ரை பண்ணிருக்காரு. ரிசல்ட் என்னமோ இங்க இருக்குற அளவுக்கு அங்க இல்ல. எனக்கு என்ன டவுட்டுன்னா இங்க இருக்குறவங்களை பார்த்து டில்லியில பேசுறாங்களா, இல்ல அவங்க ட்ரெயினிங்ல நம்மாளுங்க அப்படி பேசுறாங்களா..நீங்க அப்டேட்டை பாருங்க, நான் திங்க் பண்ணிட்டு வாரேன்.

@Kozhiyaar

குடும்பத்துக்கு புது துணி வாங்குவதற்காக இந்த மாசம் முழுசும் கிழியணும் தந்தை!!!

@rahimgazali

அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்#

தினகரன் பக்கம் போய்டாமல் இருக்க எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவிக்கப்பட்ட திட்டத்தை சொல்றாருன்னு நினைக்கறேன்.

@Thaadikkaran

ஜிம்முக்கு போனதும் நமக்கு உடனே உடம்பு ஏறிரும்னு நினைக்குறதும், லாட்டரி வாங்குனதும் முதல் பரிசு நமக்குத்தான்னு விழுகும்னு நினைக்குறதும் ஒண்ணு..!

@rahimgazali

கோமாவில் இருக்கிறது இந்திய ரூபாயின் மதிப்பு. இப்போ என்ன சொல்லப்போகிறார் மோடி?- யஷ்வந்த சின்ஹா#

இன்னொரு அஞ்சு வருடம் பாஜக ஆள்வதற்கு வாய்ப்பு கொடுங்க. சரி பண்ணிடலாம்ன்னு சொல்வார்.

@yugarajesh2

சைக்கிள் ஓட்டிச்சென்றவரிடம் ஓவர் ஸ்பீடு என்று கூறி ரூ.2000 அபராதம் வசூலித்த போலீஸ்- செய்தி

நல்லவேளை..!! பின்னாடி ஒருத்தன் பஸ்சை பிடிக்க வேகமாக ஓடி வந்ததை போலீஸ் பார்க்கல போல..!!

@Kozhiyaar

மழைக் காலத்து கையேந்தி பவன் கடைக்காரர் போல் கையறு நிலை, ஒவ்வொரு இஎம்ஐ நினைவூட்டலின் பொழுதும்!!!

@sultan_Twitz

எம்.ஜி.ஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு - செய்தி #

அடுத்து எம்.ஆர் ராதாவை விசாரணை ஆணையத்துக்கு நேரில் வர உத்தரவிடுவாரோ!?

@ajmalnks

அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்

இந்த விஷயம் ஓட்டு போட்ட மக்களுக்கு தெரியுமா அமைச்சரே?

@sultan_Twitz

தமிழகம் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் - தமிழிசை #

ஒரு பெரிய காந்தம் எடுத்துக்கிட்டு வீதி வீதியா போங்க நல்லா ஈர்க்கலாம்..!!

@Kozhiyaar

அம்மாவை பொருத்தவரை ஒரு வேளை உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் பத்து பதினைந்து கிலோ எடை குறைந்து விடுவார்கள் குழந்தைகள்!!!

@sultan_Twitz

தமிழகத்தில் வலிமையுடன் இயங்கும் ஒரே இயக்கம் அதிமுகதான் - அமைச்சர் ஜெயக்குமார் #

ஆமா அதிகமா குனிஞ்சி நிமிர்ந்தா வலி இருக்காதா பின்ன!?

@Vicky_stirring

சிறுவர்களுக்கு மழை பெய்யனும் ஸ்கூல் லீவு விடுவாங்க என்கிற எதிர்பார்ப்பும்

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பாஜகல யாரவாது தினமும் பேட்டி கொடுக்க மாட்டாங்களா என்கிற எதிர்பார்ப்பும் குறையவே குறையாது..!

@rahimgazali

எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு - செய்தி #

நல்லவேளை அப்ப அப்போலோவே இல்லை. இருந்திருந்தால் அண்ணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஆவணங்களையும் கேட்டிருப்பாங்க.

@HAJAMYDEENNKS

ஆட்சிக்கு வர மாட்டோம் என எண்ணி சாத்தியமில்லாத வாக்குறுதிகளை கொடுத்தோம்-

மத்திய மந்திரி நிதின் கட்கரி #

டெல்லியிலயும் ஒரு திண்டுக்கல் சீனிவாசன் இருக்காரு !

@Fazil_Amf

தமிழகத்தில் பின்வாசல் வழியாக அல்ல, முன்வாசல் வழியாகவே பா.ஜ.க நுழையும்" - எச்ச.ராஜா

கமலாலயத்தை தவிர தமிழ்நாட்டுல எங்க நுழைச்சாலும் பின்வாசல் தான்.!

@shivaas_twitz

தமிழகத்தில் நிரப்பப்படாத வெற்றிடங்களில் ஒன்று வடிவேலு..!

@Kozhiyaar

வாழ்க்கையில் பான்ட் சைஸை தவிர வேறெதுவும் பெரிதாக மாறிவிடவில்லை!!!

@ajmalnks

"தமிழகத்தில் பின்வாசல் வழியாக அல்ல, முன்வாசல் வழியாகவே பா.ஜ.க நுழையும்" - எச்ச.ராஜா

நாங்க இருக்கும்வரை அது நடக்காதுப்பூ நடக்கவே நடக்காது-நோட்டா.

@kathir_twits

மொத்தமா திட்டு வாங்கி அதை பிரிச்சு திட்டுபவர் "மேனேஜர்" !!

@Thaadikkaran

ஏதேனும் தவறு நடக்கையில் எல்லாம் என் நேரம் என்று சொல்பவர்கள், நேரத்தில் அதை செய்திருந்தால் இந்த தவறு நடந்திருக்காதே என்று நினைப்பதே இல்லை..!

@19SIVA25

கோமாவில் இருக்கிறது இந்திய ரூபாயின் மதிப்பு. இப்போ என்ன சொல்லப்போகிறார் மோடி.? - யஷ்வந்த சின்ஹா

ஒரு டாக்டராக சொல்கிறேன் பிழைப்பது ரொம்ப கஷ்டம் - தமிழிசை மைன்ட் வாய்ஸ்

-லாக் ஆஃப்

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon