மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 26 பிப் 2020

கொல்கத்தா: செல்போனை விழுங்கிய கைதி!

கொல்கத்தா: செல்போனை விழுங்கிய கைதி!

கொல்கத்தா சிறையில் நடந்த திடீர் சோதனையின்போது, கைதி ஒருவர் செல்போனை விழுங்கியதால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிரெசிடென்ஸி சிறைச்சாலையில் அக்டோபர் 1ஆம் தேதியன்று சிறைத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த ராமசந்திரா என்ற கைதி சந்தேகத்துக்கு உரிய வகையில் செயல்பட்டுள்ளார். அவர் செயின் பறிப்பு, கொள்ளை போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டிருந்தார். அதிகாரிகள் அவரை அழைத்துச் சோதனை செய்தனர். சோதனையின்போது, கைதியிடம் எந்தப் பொருள்களும் இல்லாமல் போகவே அவரை விட்டுவிட்டனர்.

அன்று இரவு கைதி ராமசந்திராவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. அதன்பின்னரும் அவருக்கு வலி அதிகரிக்கவே, உடனடியாக அவர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் ராமசந்திராவின் வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகளின் திடீர் சோதனையின்போது சிக்கிய ராமசந்திரா, தன்னிடமிருந்த செல்போனை மறைக்க அதை விழுங்கியுள்ளார். இதனால்தான் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவர் அங்கிருந்து நேற்று (அக்டோபர் 2) எம்.ஆர்.பாங்கூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: “கைதி ராமசந்திரா 7 செ.மீ. அளவுள்ள செல்போனை விழுங்கியுள்ளார் என்பது எக்ஸ்ரே சோதனையில் தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் குடல் இயக்கம் வழியாக செல்போனை வெளியில் எடுக்க முயற்சி செய்து வருகின்றனர். அது முடியாமல் போனால் கைதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீர்திருத்தச் சேவைகள் துறை அமைச்சர் உஜ்ஜல் பிஸ்வாஸ், “ஒருவர் போனை விழுங்கிவிட்டார் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

புதன், 3 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon