மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

ஆண்டவருக்கு ஒரு ஊத்தப்பம்: அப்டேட் குமாரு

ஆண்டவருக்கு ஒரு ஊத்தப்பம்: அப்டேட் குமாரு

பிக் பாஸ் முடிஞ்சுருச்சு அடுத்து என்ன பண்ணலாம்னு ஒரு ட்ரிப் அடிக்குறாருன்னு சொல்றதுலாம் சரிதான்; அதுக்காக பழைய சிலபஸை எடுத்துட்டுவந்து பேசக் கூடாதுல்ல. சினிமாவுல அப்டேட்டா இருக்குற மனுசன் அரசியல்ல விட்டுட்டாரப்பா, அதிமுக அரசு செயல்படாத அரசுன்னு சொல்லப்போக ஏன் ஆண்டவரே நீங்களுமா பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்தீங்கன்னு டிவிட் மேல ட்விட் போட்டு கேக்குறாங்க சார். உலக லெவல்ல மிரட்டுற மாதிரி படம் எடுத்துருந்தாலும் பசங்க ஒரு மீம் போட்டு சாருக்கு ஒரு ஊத்தப்பம்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்காங்க. அப்டேட்டைப் பாருங்க.

@Kozhiyaar

பிரச்சினைகள் விஜய் சேதுபதி படம் மாதிரி வதவதன்னு வந்துகிட்டே இருக்கு!!

மகிழ்ச்சி என்னவோ சிம்பு படம் மாதிரி இப்பவோ அப்பவோ ஒன்றிரண்டு தான் வருது!!!

@ajmalnks

“தமிழகத்தில் இருப்பது இயங்காத அரசு!” -கமல்ஹாசன்

இஞ்சினே இல்லாமல் எப்படி ஆண்டவரே இயங்கும்.?

@Kannan_Twitz

ஸ்கூட்டிக்குலாம் டிஸ்க் பிரேக் தேவைதானா எங்கள் தேவதைகளுக்கு கால் இருக்கும் போது...

எப்படியும் கால்ல தரதரனு தேய்ச்சுதான் நிப்பாட்டுவாங்க.

வேண்ணா டிஸ்க் வச்ச செருப்பு விக்கலாம்!

@shivaas_twitz

அடகுவைத்து வாங்கிய பணம் என்று காந்திக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

சிரிக்கிறார்..!

@Thaadikkaran

வருஷத்துல கரெக்டா இன்கிரிமெண்ட் விழுகுறது வாடகைக்கு வீடு விடும் ஹவுஸ் ஒனர்களுக்கே..!!

@vickytalkz

இனி அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன்!' - திண்டுக்கல் சீனிவாசன்

வனத்துறைய பத்தி கேட்டா மாட்டும் அப்டியே அறுத்து தள்ளிருவீங்க

@shivaas_twitz

காலை நேர போக்குவரத்துல, அடிச்சு புடிச்சி ஆபீஸ்க்கு போய் சரியான நேரத்துல 'பஞ்ச்' வைக்கிறது கூட ஒரு 'விரல்' புரட்சி தான்..!

@ajmalnks

இனி பொது இடங்களில் "பெட்ரோல் திருடர்கள் ஜாக்கிரதை" என்ற போர்டு மாட்டும் நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

@Kozhiyaar

விடுப்பு நாளில் பணிக்கு செல்வதென்றால் உடல் எழுந்தாலும் மனம் விழிக்க மறுக்கிறது!!

@Annaiinpillai

sbi வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் தொகை 40,000ல் இருந்து 20,000ஆக குறைப்பு

இது தெரியாம ஒருத்தரு இங்கிலாந்து பொருளாதாரத்த தாண்ட போறாராம்

@Kannan_Twitz

தமிழகத்தில் இருப்பது இயங்காத அரசு.

-கமல்ஹாசன்

என்னா ஆண்டவரே திடீர்னு?

ஓ பிக்பாஸ் முடிஞ்சிப்போச்சா

@ajmalnks

மழை நேரங்களில் காகிதங்களில் கப்பல் செய்து சாலைகளில் ஓடும் மழைதண்ணீரில் விட்டு அது மிதந்து செல்வதை பார்த்து ஆனந்தப்பட்ட கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.

@Kannan_Twitz

கையால முகத்த பொத்திக்கிட்டு விரல் கேப்ல முழு பேய் படத்தையும் பார்த்து முடிப்பது போன்றதோர் வாழ்க்கை.

@வெ. பூபதி

மாறிமாறி புகார் சொல்லும் குழந்தைக்கும் மனைவிக்கும் நடுவில், தீர்ப்பு சொல்லமுடியாத ஜட்ஜாக இருப்பது அவ்ளோ கஷ்டமான வேலை!

@amuduarattai

செய்தி: வாடகை பாக்கியை செலுத்தாத வீடு,கடைகளுக்கு சீல் வைப்பு நடவடிக்கைகளில் அறநிலைத் துறை தீவிரம்.

வாடகை பாக்கி என்றாலே, நம்ம ஆளுக ரஜினியை ஓரக்கண்ணால் பார்ப்பாங்களே.

@gips_twitz

ரஜினியின் கருத்துகள் பிடிக்காததால் கமல் கட்சியில் இணைந்துள்ளேன் - ஸ்ரீப்ரியா

கருத்து பிடிச்சிருந்தாலும் கட்சியில சேர முடியாது... ஏன்னா ரஜினி தான் கட்சியே ஆரம்பிக்கலையே

@ajmalnks

இனி அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன்!' - திண்டுக்கல் சீனிவாசன்

அப்ப எண்டர்டெய்ன்மெண்டுக்கு நாங்க எங்கே போவது?-மீம்ஸ் க்ரியேட்டர்ஸ்

@yugarajesh2

புட்பால் மேட்சு மட்டும் சிவாஜி விளையாடி இருந்தா கீழே விழுந்து துடிக்கிற துடியில ரெப்ரி ஒட்டுமொத்த டீமுக்கே ரெட் கார்டு தந்திருப்பாரு!

@Kannan_Twitz

உணவு வாய்க்குள்ள போரதுக்கு முன்னாடி இன்ஸ்டா, பேஸ்புக், டுவிட்டர்க்குலாம் போய்ட்டுதான் வருது...

-லாக் ஆஃப்

செவ்வாய், 2 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon