மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

நமக்குள் ஒருத்தி: தெய்வங்களாக அல்ல!

நமக்குள் ஒருத்தி: தெய்வங்களாக அல்ல!

நவீனா

பள்ளி நாட்களில் ஆங்கில வகுப்புகளில் 'ஆம் / இல்லை' என பதில் கூறும்படியான கேள்விகளை உருவாக்குவது எப்படி என்று ஆசிரியர் அனைவருக்கும் கற்பித்திருப்பார். ஆனால், எதற்கெல்லாம் யெஸ் / நோ என்று பதில் சொல்ல வேண்டும் என்று பின்னாளில் வாழ்க்கைதான் அனைவருக்கும் கற்பிக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்கள், சமூகம் அவர்களிடம் முன்வைக்கும் பல கேள்விகளுக்கான பதில்களில் காட்டப்பட வேண்டிய தீர்க்கம் இன்னும் கூடுதலாகவே இருக்க வேண்டியதாகிறது.

கங்கணா ரணாவத் நடிப்பில் வெளிவந்த 'குயின்' திரைப்படத்தைப் பெரும்பாலானோர் பார்த்திருப்போம். மிகவும் கட்டுக்கோப்பான குடும்பச் சூழலில் வளரும் ஒரு பஞ்சாபிப் பெண்ணின் காதலன் அவர்கள் இருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்திவிடுவான். அந்தப் பெண் முற்றிலும் தன்னம்பிக்கையற்ற பெண்ணாகப் படத்தில் சித்திரிக்கப்பட்டிருப்பாள். அந்தக் காதலன் அவள் மன வலிமை இல்லாத பெண்ணாக இருக்கிறாள் என்கிற குற்றச்சாட்டைத்தான் அவளை நிராகரிப்பதற்குக் காரணமாக முன்வைப்பான்.

திருமணம் நின்றுபோன விரக்தியில் இருப்பவள் தனது தேன் நிலவுக்காக எடுக்கப்பட்ட பயணச் சீட்டில் பாரீசுக்கும் ஆம்ஸ்டர்டாமுக்கும் தனியாகப் பயணப்படுவாள். அவள் அங்கு சந்திக்கும் நபர்களும் சூழலும் அனுபவமும் ஓர் ஆணின் துணையில்லாமல் ஒரு பெண் தன்னிச்சையாக இயங்குவது எப்படி என்கிற மன தைரியத்தையும் அனுபவத்தையும் அவளுக்குக் கொடுக்கும். சமுதாயம் பெண்கள் மீது திணித்து வைத்திருக்கும் பல்வேறு அடிமைக் கட்டுக்கள் அவளுக்கு அங்கு உடைபடும். ஒரு முழு மனுஷியாக, தன்னம்பிக்கையின் முழு வடிவமாக ஊருக்குத் திரும்புவாள். அவளின் காதலன் இப்போது அவளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பான். ஆனால், அவன் போட்ட மோதிரத்தை அவனிடம் கழற்றிக் கொடுத்துவிட்டு தீர்க்கமாக, திண்ணமாக 'நோ' என்று சொல்லிவிட்டு நடந்துவிடுவாள்.

பெண்களின் மனங்களை சில விஷயங்கள் வெகு நாட்களாக அழுத்திக்கொண்டிருக்கும். அவற்றைச் சரி என்று மெல்லவும் முடியாமல், இல்லை என்று விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருப்பார்கள். தன் மனதிற்குப் பிடிக்காத, முழுவதும் ஒவ்வாத விஷயங்களைக்கூட பெண்கள் மனக்கசப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருந்துவருகிறது. சட்டென்று ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லப் பெண்கள் காலம் காலமாகவே பழக்கப்பட்டுவிடாதபடி இந்தச் சமூகம் மிகக் கவனமாக பார்த்துக்கொண்டிருக்கிறது.

புராண காலங்களில்கூட, தீயில் இறங்கச் சொன்ன ராமனிடம் முடியாது என்று சீதை சொன்னதாகப் பதிவு இல்லை. தன் மானத்திற்கு வந்த இழுக்கை நெருப்பில் இறங்கியாவது சரி செய்துவிடத்தான் அந்தப் பெண் எண்ணினாள். கணவன் தன் மீது நம்பிக்கை இழந்து விட்டான் என்கிற பேரிடியைத் தாங்கிக்கொண்டும் அவள் ராமனின் கட்டளையை நிராகரிக்கவில்லை. எப்போதும் சயன நிலையில் இருக்கும் விஷ்ணுவுக்குச் சேவகம் செய்பவராகவே லக்ஷ்மியைச் சித்திரிக்கும் புராணங்களில்கூட 'நானும் தெய்வம்தான், எனக்கும் தூக்கம் வரும்' என்று லக்ஷ்மி கேட்டதாய் ஆதாரம் இல்லை.

சிறு வயது முதலே இவ்வாறான புராணக் கதைகளை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்தச் சமூகம் தலைமுறை தலைமுறையாய் சொல்லிவரக் காரணமே, ஆண் பெண் ஆகிய இரு பாலருக்குமான நடைமுறை விதிகளைக் கதை வழியாகப் பாடம் புகட்டுவதற்காகத்தான். அதனால்தான் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது, 'வீட்டுக்காரன எதுத்து பேசாதம்மா, மாப்பிள கொஞ்சம் கோபப்பட்டாலும் நீ அனுசரிச்சு போம்மா' என்றெல்லாம் பெண்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். ஆனால், இதற்கு நேர் எதிர்மறையாக ஆண்களிடம், 'பொண்டாட்டிய ஆரம்பத்திலேயே அடக்கிவைடா, இல்லனா பின்னாடி ரொம்ப சிரமப்படுவ' என்று சொல்லிவருகிறார்கள்.

இவ்வாறான அறிவுரைகளை ஆண்களுக்கும் பெண்களுக்கும் காலங்காலமாக எடுத்துரைத்து வருவது பெரும்பாலும் பெண்களேயாவார்கள். இங்கேதான் இருக்கிறது சமூகத்தின் சாணக்கியத்தனம். பெண்களை அடிமைப்படுத்த வேண்டும். ஆனால், அதனை அவர்கள் அறியாதவாறு இயல்பாக நிகழ்வது போல் சித்திரிக்க வேண்டும் என்பதுதான் சமூகத்தின் நிலைப்பாடு.

அன்றே சீதை முடியாது என்று சொல்லியிருந்தால் கற்பு என்னும் கோட்பாட்டினைப் பெண்களோடு பொருத்திச் சந்தேகக் கண்களால் அவர்களை நித்தம் நித்தம் தீயில் இறங்கச் செய்யச் சமூகத்தினால் இன்றுவரை முடிந்திருக்காது. சதா சர்வ காலமும் சேவகம் செய்ய என்னால் முடியாது என்று லக்ஷ்மி சொல்லியிருந்தால் பல ஆண்டுகளாக அடுப்படியில் அடைபட்டுப் பெண்கள் துன்பப்பட வேண்டிய நிலை வந்திருக்காது. பொறுத்துப்போகிற பெண்தான் பூமாதேவி, அடங்கி போகிறவள்தான் மகாலட்சுமி என்பது போன்ற கருத்துகளைச் சமூகம் பெண்கள் மனதில் பசை போட்டு இளம் வயதிலேயே ஒட்டிவிடுகிறது. அவர்களும் தங்கள் மேல் பாயும் எந்த ஓர் அடக்குமுறையையும் புன்னகையுடன் எதிர்கொள்ளப் பழகிக்கொள்கிறார்கள். பூமாதேவிகளாகவும் மகாலட்சுமிகளாகவும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தெய்வத்திற்கு நிகரான அந்தஸ்தை இம்மி பிசகாமல் கட்டிக் காத்துவருகிறார்கள். இதனால்தான் பெண்களை அழுத்திக்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள்.

பெண்களை தெய்வம்போல் தொழுகிறோம் என்கிற முலாம் பூசப்பட்ட வார்த்தைகளில் பெண்கள் மயங்கிக் கிடந்தது போதும். பெண்கள் இனிமேலாவது வாய் திறந்து தன் விருப்பத்தைச் சமூகத்திற்குச் சொல்ல வேண்டும். அவர்கள் சொல்லப்போகும் ஆம், இல்லை என்கிற பதில்களில்தான் அவர்கள் இனி தெய்வங்களாக அல்ல நிஜ மனுஷிகளாக வாழப்போகிறார்கள்.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் வெள்ளியன்று வெளியாகும் - ஆசிரியர்)

(கட்டுரையாளர் நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்தபடைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

தொடரின் முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

ஐந்தாம் பகுதி

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

திங்கள் 1 அக் 2018