மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

10 ஆண்டுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு: சுமித்ரா மஹாஜன்!

10 ஆண்டுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு: சுமித்ரா மஹாஜன்!

10 ஆண்டுகளுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அம்பேத்கா் கூறியதாக நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஞ்சியில் லோக்மாந்தன் என்ற விழா நேற்று (செப்-30) நடைபெற்றது. அந்த விழாவிற்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார் அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சுமித்ரா மஹாஜன்,இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் அரசு பதவிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை 10 ஆண்டுகளுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்குள் இடஒதுக்கீட்டினால் பயனடைந்தவர்களை கைதுாக்கி விட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. தற்போதைய நாடாளுமன்றம் அதை 10 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இதற்கு முன்பாக 20 ஆண்டுகளுக்கு முன்பாக அது நீட்டிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதால் நாட்டிற்கு நலத்தைக் கொண்டுவர முடியுமா, இடஒதுக்கீடு மட்டும் நாட்டை மாற்றி விடுமா, இடஓதுக்கீடு குறித்த கிராமங்களில் மாறுபட்ட சிந்தனை வளர வேண்டும் என்றும் தன்னுடைய கருத்துகள் தனிப்பட்டவை என்றும் அவர் பேசினார்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon