மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

இதயத்துக்கு நெருக்கமான தினம்!

இதயத்துக்கு நெருக்கமான தினம்!

தினப் பெட்டகம் – 10 (29.09.2018)

இன்று உலக இதய தினம் (World Heart Day). அதையொட்டி, இதயம் குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.

1. உலக இதய அறக்கட்டளை (World Heart Foundation) எனும் அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் உலக இதய தினத்தை செப்டம்பர் 29ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்கிறது. உலகில் அதிகமான மரணத்திற்கும், உடல் ஒவ்வாமைக்கும் காரணமான இதய பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

2. ஒவ்வொரு ஆண்டும் இதய பிரச்சினைகள் காரணமாக இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 17.5 மில்லியன்!

3. 70%க்கும் அதிகமான இதய பிரச்சினைகள், குறிப்பாக மாரடைப்புகளோ, மூச்சுத் திணறலோ வீட்டில் இருக்கும்போது அல்லது யாராவது உடன் இருக்கும்போதே நிகழ்கிறது.

4. இதய பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்குச் செய்ய வேண்டிய விஷயமாகச் சொல்லப்படுபவை: ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்தல், ரத்த அழுத்தத்தைக் கண்காணித்தல், உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது.

5. இதயம் சம்பந்தமான நோய்கள் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களிலேயே அதிகமாகக் காணப்படுகின்றன.

6. பெண்களைவிட ஆண்களுக்கே இதயம் சம்பந்தமான நோய்கள் அதிகமாக ஏற்படுகின்றன.

7. இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் தென்னிந்தியாவில்தான் மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது.

8. புகைபிடிக்கும் பழக்கமும் இதயப் பிரச்சினைக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

9. 1970களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, முன்பெப்போதையும் விட அதிகளவில் இதய பிரச்சினைகள் ஏற்படுகின்றனவாம்.

10. உலக இதய தினம் முதன்முதலாக 1999அம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

- ஆஸிஃபா

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon