மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

இணையத்தைக் கலக்கும் பாலிவுட் ‘ஊர்வசி’!

இணையத்தைக் கலக்கும் பாலிவுட் ‘ஊர்வசி’!

பிரபுதேவாவின் பாடலுக்கு ஷாகித் கபூர் நடனமாடியுள்ள வீடியோ வெளியாகி இணையத்தைக் கலக்கிவருகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்து வெளியான படம் காதலன். இந்தியில் ஹம்ஸே ஹை முக்காபலா எனும் பெயரில் டப் செய்யப்பட்ட இந்தப்படம் அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இதன் பாடல்களுக்கு இந்தி ரசிகர்களும் குத்தாட்டம் போட்டார்கள்.

இதன் தமிழ் வெர்ஷனில் ஊர்வசி ஊர்வசி என்னும் பாடலும் இடம்பெற்றிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சுரேஷ் பீட்டர்ஸ், ஷாகுல் ஹமீது, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இந்தப் பாடலைப் பாடினர். பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். பேருந்துகளின் மேற்கூரையின் மீது ஏறி நின்று பிரபுதேவா இதில் நடனமாடியிருந்தார்.

இந்நிலையில் அந்தப் பாடல் தற்போது இந்தியில் மியூஸிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. ஷாகித் கபூர் மற்றும் கியாரா அத்வானியின் கலக்கல் நடனத்தில் இந்தப்பாடல் வந்துள்ளது. இதில் ஹெலிகாப்டரின் கீழே ஷாகித் கபூர் பறப்பது போன்ற காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

டி- சீரிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்பாடலுக்கு பாடல் வரிகள் எழுதியதோடு இசையும் அமைத்துள்ளார் யோ யோ ஹனி சிங்கர். சஞ்சய் ஷெட்டி இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். டைரக்டர்கிஃப்டி இப்பாடலை இயக்கியுள்ளார். இந்தப் பாடல் தற்போது இணைய ரசிகர்களிடத்தில் சிறப்புக் கவனம் பெற்றுவருகிறது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon