மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

பண்டிகைக் கால விற்பனையில் பாதிப்பு?

பண்டிகைக் கால விற்பனையில் பாதிப்பு?

சுங்க வரி உயர்வால் பண்டிகைக் கால விற்பனை பாதிக்கப்படும் என்று தொழில் துறையினர் கருதுகின்றனர்.

ஏசி, ஃபிரிட்ஜ் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் கம்ப்ரசர்களுக்கான சுங்க வரியை அண்மையில் 10 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியது. இந்த வரி உயர்வால் பின்னடைவு ஏற்படலாம் என்றும், பண்டிகைக் கால விற்பனை பாதிக்கப்படும் எனவும் நுகர்வோர் சாதன தொழிற்துறை கருதுகிறது. ஏற்கெனவே குறுகிய அளவிலான அழுத்தத்தைச் சந்தித்து வரும் நுகர்வோர் சாதன தொழிற்துறைக்கு இந்த வரி உயர்வு மேலும் பாதகமாக அமைந்துள்ளது. மத்திய அரசின் சுங்க வரி உயர்வு நடவடிக்கையால் விலையுயர்ந்த ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகிய பொருட்களின் விலை மேலும் 3 முதல் 5 விழுக்காடு உயர்வைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கவும், சரிந்து வரும் இந்திய ரூபாய் மதிப்பை மீட்டெடுக்கவும் மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளில் இந்த வரி உயர்வும் ஒன்றாகும். இந்த நடவடிக்கையால் சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவை கட்டுப்படுத்தப்படும். ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகிய பொருட்களின் இறக்குமதிக்கான சுங்க வரியை மத்திய அரசு இருமடங்காக உயர்த்தி 20 விழுக்காடாக நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon