மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

விக்ரம் வேதா: உறுதியான இந்திக் கூட்டணி!

விக்ரம் வேதா: உறுதியான இந்திக் கூட்டணி!

கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றிப் பட வரிசையில் இடம்பிடித்த, ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் இந்தி ரீ மேக்கில் நடிப்பது யார் என்பது உறுதியாகியுள்ளது.

புஷ்கர்-காயத்திரி தம்பதியரின் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விக்ரம் வேதா’. இதில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். மாதவன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி கேங்ஸ்டராகவும் தோன்றினார். இப்படம் இருவருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் டீசரை பாலிவுட் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான ஷா ருக் கான் வெளியிட்டு பாலிவுட் வரை பேசக்கூடிய திரைப்படமாக வளர்ந்தது. மேலும் இந்தப் படத்தை பார்த்த ஷா ருக், இதன் இந்தி ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். சமீபத்தில் ஒரு சில காரணங்களால் ஷா ருக் இதிலிருந்து விலகினார்.

இதனையடுத்து வேறு சில ஹீரோக்களிடம் பேசி வந்த நிலையில், ஹிரித்திக் ரோஷனும் சஞ்சய் தத்தும் நடிப்பது உறுதியாகியுள்ளது. மாதவன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தும், விஜய் சேதுபதி வேடத்தில் ஹிரித்திக் ரோஷனும் நடிக்கின்றனர். தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்திரியே இயக்குகின்றனர். சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon